நெல்லை மாவட்டம், வி.கே.புரம் பகுதியைச் சேர்ந்தவரும், நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் மதிப்புமிகு உறுப்பினராகத் திகழ்ந்தவருமான மூத்த பத்திரிகையாளர் திரு. வனராஜ் அவர்கள் நேற்று இரவு (டிசம்பர் 14, 2025) காலமானார் என்ற துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மூத்த பத்திரிகையாளர் திரு. வனராஜ் அவர்கள் மறைவு செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. தினமலர் நாளிதழில் நிருபராகப் பணியாற்றிய காலத்தில், தென்காசி மற்றும் நெல்லைப் பகுதியில் சமூகப் பொறுப்புணர்வுடனும், நேர்மையுடனும் செய்திகளை மக்களுக்கு எடுத்துச் சென்றவர். பத்திரிகைத் துறையில் திரு. வனராஜ் அவர்கள் ஆற்றிய பணி அளப்பரியது. அவரது மறைவு, தமிழ் ஊடகத் துறைக்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும்.
நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும், மறைந்த திரு. வனராஜ் அவர்களின் இழப்பினால் துயருறும் அவரது குடும்பத்தினர், சக ஊழியர்கள், நண்பர்கள் மற்றும் பத்திரிகைத் துறை சகாக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம் என்று தெரிவித்தார்.
.png)