
அடிமை சங்கிலி அறுந்த நாள் நினைத்து,
அரசியல் சாசனம் பிறந்த நாள் போற்றி,
உரிமை, ஒற்றுமை, சமத்துவம் காக்க
உயிர் தந்த வீரர்களை வணங்கும் நாள் இது.
மூவர்ணக் கொடி பறக்கும் ஒவ்வொரு நொடியில்,
தியாகத்தின் அர்த்தம் நம் மனதில் மலரட்டும்.
இந்தியன் என்ற பெருமை
ஒவ்வொரு இதயத்திலும் ஒளிரட்டும்.
நேர்மை நம் பாதையாக,
ஒற்றுமை நம் பலமாக,
சுதந்திரம் நம் மூச்சாக
இந்த நாடு என்றும் உயரட்டும்!
அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!
Dr. கா. குமார்,
தலைவர், நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன்
.png)

