இக்கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.
மாநில நிர்வாகிகள் முரளி மற்றும் அருள்பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குடியாத்தம் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். இக்கூட்டத்தில் புதிய உறுப்பினர்களுக்கு சங்கத்தின் அடையாள அட்டை வழங்கினர்.
இக்கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களின் நலத்திட்டங்கள், அரசு சலுகைகள், வீட்டு மனை பெறுதல் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியின் முடிவில் மாலைமுரசு நிருபர் சத்யராஜ் நன்றி உரையாற்றினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில-மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.