Search This Blog

Translate

உலக பத்திரிகை சுதந்திர நாள்(World Press Freedom Day) வாழ்த்துக்கள்... NJU 9வது ஆண்டு விழா நல்வாழ்த்துக்கள்

அன்புடையீர்..! 

நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் குடும்பத்தினருக்கும் (நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்), செய்திதுறையினர் அனைவருக்கும்  இனிய உலக பத்திரிகை சுதந்திர நாள்(World Press Freedom Day) வாழ்த்துக்கள். 


செய்திதுறையினருக்காக சமூக பாதுகாப்பு, செய்தியாளர்களின்  உரிமை பெற்றிட உறுதுனையுடன் முன்னெடுப்பு நடவடிக்கையாக   இந்நன்னாளில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் துவக்கப்பட்டது.   

நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் Trade Union Act, 1926 and the Central Trade Union Regulations, 1938-ன் கீழ்  சிறப்பாக செயல்பட்டுவருகிறது.  

இன்றுடன் 9 ஆண்டில் வெற்றி நடையுடன் உழைக்கும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பாளனாக நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன்  சிறப்பான பணிகளை தொடர்ந்து செயலாற்றிவருகிறது என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.




உலக பத்திரிகை சுதந்திர நாள்

உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் "மனித உரிமைகள் சாசனம்" பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

ஆப்பிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே "பத்திரிகை சுதந்திர சாசனம்" (Declaration of Windhoek) முன்வைக்கப்பட்டது. 

இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட ,'உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடகச் சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை' என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.


PRESS

P - People (மக்கள்),

R - Royal  (ராஜ்ஜியம்),

E - Education (கல்வி),

S - Sound- (காதால் கேட்பது),

S - Sight- (கண்களால் பார்ப்ப்து).

இவை எல்லாம் இனணந்துதான் ’பிரஸ்’ என்ற ஆங்கிலச் சொல் உருவானது.

‘செய்தி’ என்பதை ஆங்கிலத்தில் ‘News’ என்கிறோம்.  இது எப்படி ஏற்பட்டது?

நான்கு திசைகளிலிருந்து செய்தி கிடைக்கிறது. அதைக் குறிக்கும் விதமாக வடக்கு (North)  கிழக்கு (East)  மேற்கு (West)  தெற்கு (South)என்னும் சொற்களின் முதல் எழுத்துகள் இணைந்துதான் ‘நியூஸ்’ என பரவலாக கருத்து நிலவுகிறது. 

ஆனால் உண்மையில்  செய்தி என்பது  “குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் வானிலை மற்றும் விளையாட்டு".   

அதாவது ஆங்கிலத்தில் The full form of NEWS is Notable Events, Weather, and Sport என்பதாகும். 


கேள்விகுறியான சுதந்திரம் :

ஜனநாயகத்தில் நான்கு தூண்களாக சட்டம் இயற்றுதல், நீதித் துறை, நிர்வாகத் துறை, பத்திரிகை இருக்கின்றன. பத்திரிகை நான்காவது தூண் என்று அழைக்கப்படுகிறது.

இரவு பகல் பாராமல் அயராது உழைக்கும்  செய்திதுறையினருக்கு முழு சுதந்திரம் உள்ளதா என்ற கேள்வி இன்று நம்முன் எழுகிறது.  

தற்போது பத்திரிக்கைச் சுதந்திரத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ வரைமுறைப்படுத்தும் மத்திய அரசின் பத்திரிக்கைச் சட்டம் எதுவும் இல்லை என்றாலும் சில சமயங்களில் தேவையில்லாமல் பத்திரிக்கைகள் மீது வழக்கு போடுவது நடக்கத்தான் செய்கிறது. .

சமூக சார்ந்த பிரச்சனை, எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் பேச்சளவிலே உள்ளது. முழுமையாக செய்திதுறையினர் செயலாற்ற முடியவில்லை என்பதே நிதர்சனம்.  அனைத்து துறைபோன்று இதிலும் சில ஊடுருவல்கள் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். நம் துறையை நாமே காக்கவேண்டும் என்ற சவால் நம் முன்னே உள்ளது. 


எம் அருமை எழுத்துலக  சொந்தங்களே...!

நாம் அனைவரும்  வேற்றுமை நீங்கி ஒற்றுமையாக 

       

நம் சுதந்திரத்தை காத்திட 

        உரிமைகளை பெற்றிட...!

இறையாண்மையை வென்றெடுக்க

        ஒன்றுபடுவோம்...! 


தொழிற்சங்க விதியின்படி 

        அரசு அங்கீகாரம் பெற்ற 

நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின்   

        ஓர் அங்கத்தினராக! 


நன்றி 

நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன்  குடும்பத்தினர்


Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(180)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !