திருநெல்வேலி, டிச.29-
திருநெல்வேலி மாவட்டத்தில் நேஷனல் ஜர்னலிஸ்ட் யூனியன் (NJU) சார்பில் தென் மண்டல கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் காலச்சக்கரம் நாளிதழ் எக்ஸ்கியூடிவ் எடிட்டர் / நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர். கா.குமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், ஆலங்குளம் அருகே நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் (NJU) சார்பில் தென் மண்டல கலந்தாய்வு கூட்டம், காலச்சக்கரம் நாளிதழ் எக்ஸ்கியூடிவ் எடிட்டர் / நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர். கா.குமார் மற்றும் தென் மண்டல தலைவர் எஸ்.சாமுவேல் பிரபு தலைமையில் இன்று (29-12-2023) நடைபெற்றது.
தென்காசி மாவட்ட தலைவர் எம்.முருகன் முன்னிலை வகித்தார். நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மரகத சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார்.
தென்காசி மாவட்ட செயலாளர் சாலமன் ஜெயராம், நெல்லை மாவட்ட தலைவர் முருகேசன் உட்பட நெல்லை உறுப்பினர்கள், தென்காசி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் மாவட்ட, மாநில நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டர்.
மேலும், வேலூர் மண்டல நிர்வாகிகள் டாக்டர் ராஜ்பாபு, முஜிப் ரகுமான், துரைராஜ் சிறப்பு அழைப்பாளர்களாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர்.
இக்கூட்டத்தில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசியத் தலைவர் டாக்டர். கா.குமார் உரையாற்றியதாவது:-
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் விதிமுறைகளும், பத்திரிக்கையாளர்கள் பின்பற்றக்கூடிய அரசு விதிமுறைகளையும், இந்திய தொழிற்சங்க பதிவுடனும், தொழிலாளர் துறை சட்டம்-1926-ன் கீழ் விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. வருடம்தோறும் சங்க உறுப்பினர்கள் பெயர் பட்டியல் தவறாமல் தொழிலாளர் துறையில் பதிவு செய்யப்படுகிறது.
இச்சங்கம் பத்திரிக்கையாளர்கள் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் மத்திய-மாநில அரசு விதிமுறைப்படி ஆரம்பிக்கப்பட்டு, THE WORKING JOURNALISTS AND OTHER NEWSPAPER EMPLOYEES (CONDITIONS OF SERVICE) AND MISCELLANEOUS PROVISIONS ACT, 1955-ன் படி சிறந்த நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு அளவில் பதிவுகளின் விவரத்தை அறிந்து தமிழ்நாடு அரசு செய்தி துறை இயக்குனர், செய்தி துறை அமைச்சர் மாண்புமிகு சுவாமிநாதன் அவர்கள் நேஜயூ நிறுவன தலைவர் டாக்டர்.குமாரை அழைத்து நம்ம சங்கங்களின் பதிவின் சிறப்பு குறித்து கேட்டறிந்து கலந்துரையாடினார்கள்.
செய்தி துறை சார்ந்தவர்களுக்கு ஏற்படும் இடர்கள் குறித்தும் கேட்டறிந்து உடன் சென்ற நிர்வாகிகளிடமும் உரையாடினார்.
நம் யூனியன் செயல்பாடுகளையும், நிர்வாகிகளையும் பாராட்டினார். நிறைய தவறான சங்கங்கள் முளைப்பதையும், போலி செய்தியாளர்கள் குறித்து வருத்தத்தை தெரிவித்தார். இதற்கு தக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனில் ஓர் குடும்பமாய் இணைந்த பத்திரிக்கையாளர்கள் உரிமைகளையும் பாதுகாப்புகளையும் நாம் முழுமையாக காக்கவேண்டும் என்றும், வாழ்க்கை தர மேம்படவும், செய்திதுறை வளர்ந்திடவும் அனைவரும் இணைந்து ஒற்றுமையுடம் திறம்பட செயலாற்றவேண்டும் என சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்திற்கு பங்பேற்ற மாநில, மாவட்ட, தென் மண்டல அனைத்து நிர்வாகிகளுக்கும், பொறுப்பாளர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் மகிழ்ச்சியையும், நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இக்கூட்ட இறுதியில் தென்காசி மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் நன்றியுரையாற்றி கூட்டம் நிறைவு பெற்றது.
இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது.