அன்புடையீர்
வணக்கம், நமது சங்க உறுப்பினர் ஐயா பவுல்ராஜ் அவர்களின் இறுதி ஊர்வலம் இன்று (29.12.2023) குறிஞ்சிப்பாடி வட்டம் கிருஷ்ணன்குப்பம் கிராமத்தில் மாலை 03:00 மணி அளவில் நடைபெறுகிறது.
நமது சங்கத்தின் சார்பில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்த உள்ளோம்.
நமது சங்க உறுப்பினர்கள் இன்று (29.12.2023) மதியம் 01:00 மணி அளவில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள ஆனந்த பவன் ஹோட்டல் அருகில் ஒன்று கூடி அன்னாரின் கிராமத்திற்கு புறப்பட எத்தனித்துள்ளோம்.
எனவே நமது சங்க உறுப்பினர்கள் இன்று மதியம் 01:00 மணிக்கு வந்து சேருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி
கோ.கனகவேல், மாவட்டத் தலைவர்
தி.ராகுலன், மாவட்ட செயலாளர்
ஐ.நாகமுத்து, மாவட்ட பொருளாளர்
S.விஸ்வநாதன், மாவட்ட செய்தி தொடர்பாளர்
நேஷ்னல் ஜா்னலிஸ்ட் யூனியன் (NJU)
கடலூர் மாவட்டம்.