நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியனின் உறுப்பினர் சமூக சேவகர் திரு. பவுல்ராஜ் மறைவுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியனின் உறுப்பினர் செய்தியாளர்- சமூக சேவகர் திரு. பவுல்ராஜ் நேற்று மாலை மண்ணுலகை நீத்தார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன், மிகுந்த மனவேதனையும் மீளா துயரத்தை அளிக்கிறது.
மக்கள் சேவையில் மகத்தான பணி செய்து வந்தார். அவரது மறைவு பேரிழப்பாகும்.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், சக செய்தியாளர்கள் அனைவருக்கும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது குடும்பத்திற்கு என்றும் உறுதுணையாக நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் இருக்கும். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
இவ்வாறு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.