நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியனின் திருவனந்தபுரம் மாவட்ட செயலாளர்- செய்தியாளர் அனி வேலப்பன் அவர்களின் தாயார் வேலம்மா மறைவுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியனின் திருவனந்தபுரம் மாவட்ட செயலாளர்- செய்தியாளர் அனி வேலப்பன் அவர்களின் தாயார் வேலம்மா அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு என்றும் உறுதுணையாக நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் இருக்கும். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.
இவ்வாறு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.