வேலூர், நவ.6, 2018:
பத்திரிகைத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின் அனைத்து உறுப்பினர்களுக்கும் புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கி, “இல்லங்களில் இன்பம் பொங்கிட வேண்டும்” என நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தினசரி செய்தித்தாள்களையும், புத்தகங்களையும் அன்றாடம் வாடிக்கையாளர்களிடம் சேர்க்கும் கடைநிலை ஊழியர்களாக அரும்பணியாற்றும் கடைக்காரர்களுக்கு மரியாதை செய்து கௌரவிக்கும் வகையில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்கள் கூறி மரியாதை தெரிவித்தார்.