Search This Blog

Translate

தினமணி செய்தியாளர் கோபி மறைவுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் நேரில் அஞ்சலி

 தருமபுரி:

தினமணி செய்தியாளர் கோபியின் மறைவுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் நேரில் சென்று மலர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி அவசரகால நிதி உதவி வழங்கினார்.  


தர்மபுரி பகுதியை சேர்ந்த செய்தியாளர் திரு. E. கோபி. இவர் தினமணியில் பலவருடமாக சிறந்த செய்தியாளராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். காஞ்சிபுரத்தில் பல வருடம் பணிபுரிந்து அங்கு சிறந்த செய்தியாளர் என பெயர் பெற்றவர். அங்கிருந்து திருச்சிக்கு பணிமாற்றம் பெற்று திருச்சியிலும் சிறந்த செய்தியாளர் என பெயர் பெற்றார். இவருக்கு திருமணமாகி 2 கைக் குழந்தைகள் உள்ளனர். 

இப்படி சிறந்த செய்தியாளராக தன்னுடைய பணியை திறம்பட செய்த செய்தியாளர் திரு. E. கோபி, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே வாகன விபத்தில் சிக்கி எதிர்பாராதவிதமாக தன்னுயிர் நீத்தார்.. இச்செய்தி அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இத்தகவலை அறிந்த நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார்,   தருமபுரிக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.  

அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் எப்போது தங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று ஆறுதல் கூறினார்.  

இதனையடுத்து, நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார்,   திருமதி கோபியிடம் அவசரகால நிதி உதவி அளித்தார்.  

உடன் தர்மபுரி மாவட்ட தலைவர் ம. சுரேஷ், மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பொருளாளர் ஆனந்தன், மாவட்ட துணை தலைவர் ரவி மற்றும் சங்க உறுப்பினர்கள் கோவிந்தராஜ், உலகநாதன், விஜயகுமார் உட்பட பலர் இறுதி அஞ்சலில்  கலந்து கொண்டனர்

பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி பெற்று தருவதற்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் உறுதுணையாக  பணியாற்றி பெற்று தருவதாக கூறினார்கள். 

முன்னதாக, நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

தர்மபுரி பகுதியை சேர்ந்த செய்தியாளர் திரு. E. கோபி. இவர் தினமணியில் பலவருடமாக சிறந்த செய்தியாளராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். காஞ்சிபுரத்தில் பல வருடம் பணிபுரிந்து அங்கு சிறந்த செய்தியாளர் என பெயர் பெற்றவர். அங்கிருந்து திருச்சிக்கு பணிமாற்றம் பெற்று திருச்சியிலும் சிறந்த செய்தியாளர் என பெயர் பெற்றார். இவருக்கு திருமணமாகி 2 சிறு குழந்தைகள் உள்ளனர். 

தினமணி செய்தியாளர் கோபி

சமூக சிந்தனையோடு சிறந்த செய்தியாளராக சேவையாற்றினார். சக செய்தியாளர்களுடன் அன்பாகவும் மிகுந்த நட்புடன் பழகும் தன்மைகொண்டவர். சக செய்தியாளர்களின் மனதை வென்றவர்.. சமூகத்தில் சிறந்த செய்தியாளர் என்று அடையாளம் பெற்றவர். சிறந்த செய்தியை வடிவமைக்கும் திறன்கொண்டவர்... தனது சமூக சிந்தனை செய்தியினால் மக்களை தெளிவுபடுத்தும் சிறந்த செய்தியாளர் என்று போற்றகூடியவர்..

இப்படி சிறந்த செய்தியாளராக தன்னுடைய பணியை திறம்பட செய்த செய்தியாளர் திரு. E. கோபி, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே வாகன விபத்தில் சிக்கி எதிர்பாராதவிதமாக தன்னுயிர் நீத்தார்.. என்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், சக செய்தியாளர்கள் அனைவருக்கும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு என்றும் உறுதுணையாக நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் இருக்கும்.

செய்தியாளர்  திரு. E. கோபியை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பத்திரிகையாளர்களின் நலனில் அக்கறை கொண்டவர்,  செய்தியாளர்  திரு. E. கோபியின் பணியை போற்றும் விதமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். 

மேலும் வருவாய் ஈட்டும் நபரை இழந்து வாடும், இரண்டு சிறு குழந்தைகளை வளர்க்கும் கடமைகளை சுமந்து வாழ்வறியாது நிற்கும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று  நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கிறது. 

இவ்வாறு  நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(180)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !