வேலூர்:
தினமணி செய்தியாளர் கோபியின் மறைவுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
![]() |
தினமணி செய்தியாளர் கோபி |
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
தர்மபுரி பகுதியை சேர்ந்த செய்தியாளர் திரு. E. கோபி. இவர் தினமணியில் பலவருடமாக சிறந்த செய்தியாளராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். காஞ்சிபுரத்தில் பல வருடம் பணிபுரிந்து அங்கு சிறந்த செய்தியாளர் என பெயர் பெற்றவர். அங்கிருந்து திருச்சிக்கு பணிமாற்றம் பெற்று திருச்சியிலும் சிறந்த செய்தியாளர் என பெயர் பெற்றார். இவருக்கு திருமணமாகி 2 சிறு குழந்தைகள் உள்ளனர்.
![]() |
தினமணி செய்தியாளர் கோபி |
சமூக சிந்தனையோடு சிறந்த செய்தியாளராக சேவையாற்றினார். சக செய்தியாளர்களுடன் அன்பாகவும் மிகுந்த நட்புடன் பழகும் தன்மைகொண்டவர். சக செய்தியாளர்களின் மனதை வென்றவர்.. சமூகத்தில் சிறந்த செய்தியாளர் என்று அடையாளம் பெற்றவர். சிறந்த செய்தியை வடிவமைக்கும் திறன்கொண்டவர்... தனது சமூக சிந்தனை செய்தியினால் மக்களை தெளிவுபடுத்தும் சிறந்த செய்தியாளர் என்று போற்றகூடியவர்..
இப்படி சிறந்த செய்தியாளராக தன்னுடைய பணியை திறம்பட செய்த செய்தியாளர் திரு. E. கோபி, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே வாகன விபத்தில் சிக்கி எதிர்பாராதவிதமாக தன்னுயிர் நீத்தார்.. என்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், சக செய்தியாளர்கள் அனைவருக்கும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு என்றும் உறுதுணையாக நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் இருக்கும்.
செய்தியாளர் திரு. E. கோபியை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பத்திரிகையாளர்களின் நலனில் அக்கறை கொண்டவர், செய்தியாளர் திரு. E. கோபியின் பணியை போற்றும் விதமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும் வருவாய் ஈட்டும் நபரை இழந்து வாடும், இரண்டு சிறு குழந்தைகளை வளர்க்கும் கடமைகளை சுமந்து வாழ்வறியாது நிற்கும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கிறது.
இவ்வாறு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.