ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செய்தியாளர் செந்தில் என்பவர் களப்பணியாற்றி கொரோனா தொற்றால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த துயரம் அளிக்கின்றது... சமூக கடமையாற்றி உயிர்நீத்துள்ளார். அவர் ஆத்மா சாந்தியடையட்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
![]() |
செய்தியாளர் செந்தில் |
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செய்தியாளர் செந்தில் என்பவர் இன்று (09.10.2019- சனிக்கிழமை) காலை கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். பலவருடங்களாக செய்தியாளராக சிறப்பாக தனது சமூக கடமை பணி ஆற்றினார். இவர் இதற்கு முன் ஈரோடு தினகரன் நாளிதழில் பணியாற்றியவர்.
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செய்தியாளர் செந்தில் என்பவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார் என்ற வேதனைச் செய்தி கேட்டு நான் மிகுந்த துயரத்திற்குள்ளானேன். அவர்களின் மறைவு மனதை வாட்டி வதைக்கின்றன.
தனது உயிரை துச்சமென நினைத்து களப்பணியாற்றி உயிர் நீத்துள்ளார். அவர் ஆத்மா சாந்தியடையட்டும் .
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், சக செய்தியாளர்கள் அனைவருக்கும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு என்றும் உறுதுணையாக நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் இருக்கும்.
செய்தியாளர் திரு.செந்தில் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.