சென்னை:
போலி பத்திரிகையாளர்கள் - சங்கங்களை களைய நடவடிக்கை என்ன? என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் விளக்கம் அளித்துள்ளார். மேலும் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இருள் நீக்கி ஒளி தருதல் மட்டுமல்ல, அந்த ஒளியை பேதம் இல்லாமல் வழங்கும் துறை தான் பத்திரிக்கைத் துறை என்று கடந்த தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்து செய்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.
மேலும், ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று பத்திரிகைத் துறை சொல்லப்படுகிறது. பலநேரங்களில் மொத்த ஜனநாயகத்தையும் காக்கும் பெரும் பொறுப்பும் பத்திரிகைத் துறைக்கும், பத்திரிகையாளர்களுக்கும்தான் இருக்கிறது. மக்களுக்கு மட்டுமே உண்மையாக இருக்கும் பெருங்கடமை பத்திரிகையாளர்களுக்கு உண்டு.
ஜனநாயகம் - சமத்துவம் - சமூகநீதி - மதநல்லிணக்கம் - ஏழை நடுத்தர வர்க்க மக்கள் நலன் - ஆகியவை எதேச்சதிகார மனம் கொண்டவர்களால் எள்ளிநகையாடப்படும் இந்தச் சூழலில் இவற்றுக்காகப் போராட, வாதாட, எழுத, எழுதியபடி நிற்க வேண்டிய பெரும் பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு உண்டு. அதனை எந்த சமரசங்களுக்கும் இடமளிக்காத வகையில் பத்திரிகையாளர்கள் காக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்களை காக்கும் பொருட்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்ளாக அறிவித்து பத்திரிகையாளர்களின் உழைப்பை அங்கீகரித்து பத்திரிகையாளர்க்கு பெருமை சேர்ந்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்...
பத்திரிகையாளர்களின் வாழ்வாதார உதவியாக ரூ.5000 ஊக்கத் தொகை, கொரோனா நோய்த் தொற்றினால் இறப்பு ஏற்படின், இழப்பீட்டுத் தொகையை 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்ட மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எங்களையும் தன் குடும்பத்தில் ஒருவராக இணைத்து பெருமை சேர்த்த பத்திரிகை துறைக்கு உயிர் மூச்சாய் இருந்து, உயிர் நீர் ஊற்றியமைக்கு ஊடகவியலாளர்கள் சார்பில் கோடான கோடி நன்றியையும், பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று பத்திரிகைத் துறை காக்கவும், பத்திரிகையாளர்கள் காக்கவும் போலிப் பத்திரிகையாளர்கள், போலிப்பத்திரிகையாளர்கள் களைய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பணிவன்புடன் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மற்றும் அனைத்து பத்திரிகையாளர்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.
கேள்வி➱போலிப்பத்திரிகையாளர்கள்-சங்கங்கள் உருவாக காரணம் என்ன?
செய்தித் துறையை சாராதவர்களும் பதிவு துறையின் கீழ் பத்திரிகையாளர்கள் பெயரில் சங்கம் பதிவு செய்து தவறான செயலில் ஈடுபடுகின்றனர். பதிவு துறையின் கீழ் பதிவு செய்வதால் அவர்கள் அத்துறையை சார்ந்தவர்களா என்பதை ஆராய்வதில்லை... இதனை சாதகமாக கொண்டு போலி சங்கங்கள் உருவாகின்றன.
பத்திரிகையாளர்கள் அல்லாதவர்கள் பதிவுத்துறை (Register Office) Societies Registration Act-ன் கீழ் 7 பேர் கொண்டு சங்கம் என்ற பெயரில் பதிவு செய்து தவறான நடவடிக்கைகளிலும், பத்திரிகையாளர்களுக்கு சேரவேண்டிய பயன்களையும் தட்டிப் பறிக்கின்றனர். இதனால் போலி பத்திரிகையாளர்கள் ஊக்குவிக்கப் படுகின்றனர்.
இதனை தடுக்கும் விதமாக தொழிற்சங்க சட்டம் 1926-ன் (Under Trade Union Act 1926) கீழ் மட்டுமே பத்திரிகையாளர்கள் சங்கம் பதிவு செய்யவேண்டும் என்ற அறிவிப்பு செய்து ஜனநாயகத்தின் நான்காவது தூணான செய்தித்துறையை பாதுகாக்க வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது.
கேள்வி ➱ போலி சங்கத்தினர் - செய்தியாளர்கள் எந்தவிதமான செயலில் ஈடுபடுகின்றனர்?
போலி சங்கத்தினர் - செய்தியாளர்கள் அரசு உயர் அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு பொதுமக்களிடம் தவறான தகவல் பரப்புதல்... அந்த புகைப்படத்தை தங்களது வாட்ஸ்அப் டிபில் வைத்து தனக்கு நெருக்கமானவர் என்று மாயை செய்து பொதுமக்களிடன் சில வேலைகளை முடித்து தருவதாக கூ றி பணம் ஏமாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அதுமட்டுமின்றி அரசு சார்ந்த பெயர்களை கொண்டு சங்கத்தின் பெயரை வைப்பது... இதனால் அரசு தொடர்புடையது என பொதுமக்கள் எளிதில் ஏமாற்றப்படுகின்றனர். வியாபாரிகளை மிரட்டி நன்கொடை பணமாக வசூலிப்பது போன்ற செய்ல்களில் ஈடுபடுகின்றனர்.
அரசு சார்ந்த லோகோ, அரசு சார்ந்த பெயரை தனியார் பயன்படுத்த தடை செய்யவேண்டும். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வேண்டும்... இதனால் மட்டுமே போலிகளை களையெடுக்க முடியும்... அரசு உயர் அதிகாரிகளின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோன்று அரசு அதிகாரிகள் புகைப்படம் எடுப்பதை தவிர்க்கவேண்டும்... செய்தி போன்றவற்றிற்காக மட்டும் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதிக்கவேண்டும்...
போலி சங்கத்தால் பல்வேறு சமூக அநீதிகள் அரங்கேறுகின்றன....
உண்மையில் உழைக்கும் செய்தித்துறைத் சார்ந்தவர்களின் உரிமையை பறிப்பது,
சங்கத்தின் பெயரை கூறி அரசு அதிகாரிகளை மிரட்டுவது, பணி செய்யவிடாமல் தடுப்பது,
சமூகத்தில் அந்தஸ்தில் உள்ளவர்களை மிரட்டுவது, தவறாக வழிநடுத்துவது,
காவல்துறையினரால் வாகன சோதனை செய்யாமல் தடுப்பது,
பொதுமக்களை தவறாக வழிநடத்துவது, ஏமாற்றுவது..
இதுபோன்ற தகாத, சமூகத்திற்கும், சட்டத்திற்கும் எதிரான செயலில் ஈடுபடுகின்றனர்.
➱ வழிமுறைகள் மற்றும் தீர்வு:
போலி சங்கம் உருவாவுதை தடுக்க ஒரே வழி செய்தித்துறை சங்கம் தொழிற்சங்க சட்டம் 1926-ன் கீழ் தொழிலாளர் துறையில் பதிவு பெறவேண்டும் என்பதை கட்டாயமாக்கவேண்டும். தொழிலாளர் துறையில் பதிவு செய்த சங்கங்களை மட்டுமே அங்கரீக்க வேண்டும்.
ஏனெனில் தொழிலாளர் துறையில் பதிவு செய்யும் போது, அதன் விதிகள் முறையாக உள்ளன. இதனால் போலி சங்கங்களை களையப்படும். செய்தித்துறை சாராதவர்களால் போலி சங்கம் உருவாக்க இயலாது. போலி நிருபர்களும் களையப்படும்.
இந்த போலி சங்கங்கள் அடையாள அட்டை விற்பனை மையமாக மாறி வருகின்றன என்பதே நிதர்சனம் உண்மை. அரசு அதிகாரிகள் பணி செய்யவிடாமல் தடுப்பதும், மிரட்டுவது இதுபோன்றவர்களே...
இதனால் உண்மையில் உழைக்கும் பத்திரிகையாளர்கள் அவமானத்திற்கு உள்ளாகின்றனர் என்பதை வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கேள்வி ➱ அரசு சலுகைகள் முறையாக சென்றடையகின்றனவா...?
அரசு செய்தித்துறையினர் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் உதவிகள் வழங்கி வருகின்றன. ஆனால், போலி செய்தித்துறையினர், சங்கங்களால் நசுக்கப்படுகின்றன என்பதே உண்மை... இதனால் உழைக்கும் உண்மையான செய்தித்துறையினர் பாதிக்கப்படுகின்றனர்.
கேள்வி ➱ அரசு சலுகைகள் வழங்க... முறையாக சென்றடைய கட்டாயமாக்கவேண்டிய ஆவணங்கள் என்ன? ஏன்?
ஆர்.என்.ஐ., (RNI) பதிவு சான்றிதழ்
ஆர்.என்.ஐ., Annual Statement
Press Council of India(PCI) Payment Demand Notice
Press Council of India Payment Receipt
நாளிதழ் மற்றும் பருவ இதழ்களுக்கான சலுகைகள் முறைப்படுத்துதல் மற்றும் வெளியிடுதல்
Press Council of India(PCI) Payment Payment Receipt கட்டாயம் என்று அறிவிக்கின்ற நிலையில், மேற்குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களும் முறைப்படுத்தப் பட்டிருக்கும்.
ஏனென்றால், ஆர்.என்.ஐ.,(RNI) பதிவு சான்றிதழ் இல்லாமல் ஆர்.என்.ஐ., Annual Statement File செய்ய இயலாது..
Press Council of India(PCI) முக்கிய பங்கு என்னவென்றால், Annual Statement-™ Monthly GST Filing Value, Paper, Ink purchase, No.of Staff, Opening Stock, Closing Stock, Circulation என அனைத்து ஆராய்ந்துதான் Press Council of India(PCI) Payment Demand Notice அனுப்பப்படும்.
எனவே Press Council of India(PCI) Payment Receipt கட்டாயமாக்க வேண்டும். இதுவே இதற்கு சரியான தீர்வாகும்.
6 மாதம் வெளியிட்ட நாளிதழ், பருவ இதழ் கோரும் போது இதற்காக மட்டும் அச்சடித்து பெறப்படுகிறது.
முன்னனி செய்தி நிறுவனங்களின் பெயரிலும் போலி அடையாள அட்டையுடன் சுற்றுபவர்கள் இன்று உள்ளனர். செய்தி நிறுவனங்களில் இருந்து தவறான செய்கையால் நீக்கப்பட்டவர்கள் அவர்களது அடையாள அட்டையை, நகல் அட்டை உருவாக்கிக்கொண்டு தற்போதும் அதே செய்தி நிறுவனத்தில் பணிபுரிவதாக சுற்றுபவர்களும் அதிகம்.. அதனால் பணிபுரியும் நிர்வாகத்தின் பரிந்துரை கடிதம் பெறவேண்டும்...
இதனை தவிர்க்க மேற்கூறிய ஆவணங்களை கட்டாயம் செய்கின்ற போது போலி பத்திரிகையாளர்களை களைவதற்கு சிறந்த தீர்வாகும்.
கேள்வி ➱ மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் (PRO) மீது செய்தியாளர்களால் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன...?
உண்மைதான்... ஒருசில பிஆர்ஓக்கள் தனக்கு வேண்டிய செய்தியாளர்கள் என பாகுபாடு பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி பிஆர்ஓக்களுக்கு தலை ஆட்டுபர்வகளே உண்மையான செய்தியாளர்கள் என்ற நிலை உருவாக்குகின்றனர். எதிர்த்து கேள்வி கேட்பவர்களை போலி செய்தியாளர்கள் என்று முத்திரை குத்துவது ஆங்காங்கே நடைபெறுகிறது. செய்தித்துறையினரை காக்க வேண்டிய பிஆர்ஓக்களே நசுக்கு செயலில் ஈடுப்படுவது வெட்ககேடனாது.. உண்மையான திறமையான பிஆர்ஓக்களும் உள்ளனர். ஒரு சிலரால் அனைத்து பிஆர்ஓக்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகின்றன.
அதுமட்டுமின்றி ஒரு சில பிஆர்ஒக்கள் செய்தியாளர்கள் பெயரில் போலி பில் தயாரித்து சில வேலைகளில் ஈடுப்படுகின்றனர்.
பிஆர்ஓக்கள் அனைத்து செய்தியாளர்களை வாட்ஸ்அப் குருப்பில் இணைத்து மாவட்ட ஆட்சியர் கூட்டம், நிகழ்ச்சிகளை அறிவிக்க வேண்டும்.. அப்போதுதான் அரசு திட்டங்கள் முறையாக மக்களை சென்றடையும்.
செய்தியாளர்கள் டூர் அழைத்து செல்வது வழக்கம்... இவ்வாறு டூர் அழைத்து சென்று அரசு நிறைவேற்றிய திட்டங்கள் விளக்கங்கள் வழங்கவேண்டும். இதைதான் சக்ஸ் ஸ்டோரியாக வெளியிடுவார்கள்... மக்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்... ஆனால் இந்த செய்தியாளர்கள் டூர் முறையாக அழைத்து செல்வதில்லை... இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இங்கு வலியுறுத்துகின்றேன்...
மற்றவற்றில் போலிகள் இருந்தால் அவற்றை மட்டுமே பாதிக்கும்.. ஆனால் செய்தித்துறையில் உள்ள போலிகளால் ஜனநாயகம் பாதிக்கப்படும் என்பதே நிதர்சன உண்மை எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செய்தித்துறைமீது தனிகவனம் செலுத்தி முறைப்படுத்த வேண்டும்...
கேள்வி ➱ செய்தியாளர்கள் சார்பில் அரசுக்கு முக்கிய கோரிக்கை என்ன?
ஜனநாயகத்தின் 4-வது தூணாக விளங்குபவர்கள் பத்திரிகையாளர்கள். காலம் நேரம் பாராமல் உழைக்கின்ற பத்திரிகையாளர்கள் பாதுகாப்பிற்காகவும், அவர்களது நிதிநிலைமை மற்றும் குடும்ப மேம்பாட்டிற்காகவும் பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து தொழிற்சங்க சட்டம் 1926-ன் கீழ் (Under Trade Union Act 1926) பதிவு செய்து (ப.எண்..1595) கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றோம்.

சிறப்பு நலவாரியம்
செய்தித்துறைக்கு சிறப்பு நலவாரியம் அமைக்கவேண்டும்..
செய்தி சுதந்திரம் பாதுக்காப்பு
செய்தியாளர்களுக்கு செய்தி சுதந்திரம் பாதுக்காப்பு சட்டத்தை உறுதி படுத்த வேண்டும்
அரசு வாடகைக் குடியிருப்பு வசதி,
பத்திரிகையாளர்களுக்கு அரசு வாடகைக் குடியிருப்பு வசதி, பத்திரிகையாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் சிறப்பு அடிப்படையில் அரசு வாடகைக் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இத்திட்டம் செயத்தித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு முறையாக சென்றடையவில்லை. இத்திட்டம் செய்தித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு முறையாகச் சென்றடைய வழிமுறைகளை வகுத்து முறைப்படுத்த வேண்டும்
வீட்டுமனை வசதி
இத்திட்டத்தின் கீழ், பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் மாவட்ட அளவில் வீட்டு மனை ஒதுக்கீடு செய்வதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனை ஒழுங்குபடுத்த பத்திரிகையாளர் நிர்வாகத்தின் பரிந்துரையின் மூப்பு (Seniority Based) அடிப்படையிலே ஒதுக்கீடு செய்ய ஆவண செய்யவேண்டும். அதே போன்று நிர்வாத்தின் பரிந்துரை கடிதம் ஆவணம் செய்யும் பட்சத்தில் உண்மையான பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைகள் சென்றடையும். போலி பத்திரிகையாளர்கள், நிர்வாகத்திற்கு தெரியமாலே போலி அடையாள அட்டை பயன்படுத்திகின்றனர். நிர்வாகத்தின் பரிந்துரை கடிதம் ஆவணம் செய்யும் பட்சத்தில் போலி செய்தியாளர்கள் அடையாளம் காணப்படும்.
அதுமட்டுமின்றி கொரோனாவால் இறந்த செய்த்துறையினர் குடும்பத்துக்கு வீட்டுமனை பட்ட வழங்க வழி செய்யவேண்டும்...
செய்தித் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். நமது பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, தெலங்கான, புதுச்சேரி மாநிலங்களில் பல்வேறு கல்வி சலுகைகள், கட்டணமில்லா கல்வி போன்றவற்றை வழங்கி வருகின்றன.
கல்வியில் சிறந்து விளங்கும் நமது மாநிலத்தில் செய்தித்துறையைச் சேர்ந்தவர்களது பிள்ளைகளின் கல்வி தரத்தை மேம்படுத்த, அவர்களது கல்வி கடன் சுமை ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
RTE-ல் சிறப்பு பிரிவினர்கள் என்று ஆதரவற்றோர் (Orphan), மாற்றுத்திறனாளியாக இருக்கும் குழந்தை (Differently abled Child), மூன்றாம் பாலினத்தவர் (Transgender), எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட குழந்தை (HIV affected), துப்புரவு தொழிலாளியின் குழந்தை (Child of Scavenger) என்பதோடு செய்தியாளர்கள் பிள்ளைகள் என சேர்க்க வேண்டும்.
எனவே அரசு ஏற்கனவே வழங்கி வரும RTE 25 சதவீதத்தில் உள் ஒதுக்கீடாக 5 சதவீதம் இடத்தை செய்தித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கவேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது.
செய்தியாளர் அங்கீகார அட்டை, இலவசப் பயண பேருந்து அட்டை
தமிழக அரசு செய்தித்துறையைச் சேர்ந்தவர்களின் நலன் கருதி வழங்கப்படும் செய்தியாளர் அங்கீகார அட்டை, செய்தியாளர் அடையாள அட்டை, இலவசப் பயண பேருந்து அட்டை வழங்குவதில் விதிமுறைகள் மீறப்பட்டு செய்தித் துறை அல்லாதவர்களுக்கும், தகுதி இல்லாவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. செய்தியாளர் அங்கீகார அட்டை, செய்தியாளர் அடையாள அட்டை, இலவசப் பயண பேருந்து அட்டை தகுதியானவர்களுக்கு கிடைக்கும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் செய்து ஆவண செய்ய வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது.
ஓய்வூதியம்
தற்போது விலைவாசி உயர்வால் ஓய்வூதியம் ரூ.10,000/- போதுமானதாக இல்லாமல் செய்தித் துறையை சேர்ந்தவர்கள் வறுமையின் பிடியில் தவிக்கிறார்கள். எனவே இன்றைய பொருளாதார சூழலையும், பத்திரிகையாளர் நலனையும் கருத்தில் கொண்டு பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் 10,000/- ரூபாயிலிருந்து 15,000/- ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியம் 5,000/- ரூபாயிலிருந்து 8,000/- ரூபாயாகவும் உயர்த்தி வழங்கி நல்வாழ்விற்கு வழிவகுக்கவேண்டும்
மருத்து உதவிதிட்டம் விதிமுறைகள் தளர்வு
பத்திரிகையாளர் நல நிதியத்திற்கு தனியே நிதி ஒதுக்கப்பட்டு, வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் பணியிலிருக்கும் பத்திரிகையாளர்களுக்கு வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகைக்கு கிடைக்கும். வட்டித்தொகையிலிருந்து மருத்துவ நிதி உதவி அளிக்கப்படுகிறது. ஆனால் இன்று வரை முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து முறையாக செய்திதுறை சார்ந்தவர்களுக்கு கிடைக்கபெறுவது அரிதாக உள்ளது. எனவே அனைத்து பத்திரிகையாளர்களும் மருத்துவச் செலவு உதவி எளிதில் பெற மருத்துவ உதவி திட்டத்தில் உள்ள விதிமுறைகளை தளர்த்தி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
செய்தியாளர்களுக்கு கிடைக்கவேண்டிய அனைத்து சலுகைகளும் முழுமையாக அனைத்து செய்தித்துறையினருக்கும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும்.
இவ்வாறு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் கூறினார்.