வேலூர், மே 26-
பத்திரிகையாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு 5 ஆயிரம் ரூபாய் - கொரோனா நோய்த் தொற்றினால் இறப்பு ஏற்படின், இழப்பீட்டுத் தொகையை 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்ட மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா. குமார் தனது நன்றினை தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கிடையே ஊடகவியலாளர்கள் தங்கள் உயிரை துச்சமென நினைத்து பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் மக்களுக்கு சரியாகக் கொண்டு சேர்ப்பதிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்கள்.
மக்களுக்கும், அரசுக்கும் ஒரு இணைப்புப் பாலமாக இக்காலக்கட்டத்தில் சிறப்பாக இயங்கி வரும் இவர்களது பணியினை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் காலமுறை இதழ்களில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் (அரசு அங்கீகார அட்டை / மாவட்ட ஆட்சியர் வாயிலாக வழங்கப்பட்ட அடையாள அட்டை / இலவசப் பேருந்துப் பயண அட்டை போன்ற ஏதேனும் ஒரு வகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்) ஆகியோருக்கு சிறப்பு ஊக்கத் தொகையினை உயர்த்தி வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
கடந்த ஆட்சியின்போது, ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத் தொகை 3 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனை தற்போது உயர்த்தி வழங்கக் கோரி பெறப்பட்ட கோரிக்கையினை கனிவோடு பரிசீலித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஊடகவியலாளர்களுக்கான ஊக்கத் தொகையினை ரூபாய் 3 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.
அதேபோன்று, கடந்த ஆட்சியின்போது பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணிபுரியும் அரசு அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் கொரோனா நோய்த் தொற்று காரணமாக இறக்க நேரிட்டால், அவர்களது வாரிசுதாரர்களுக்கு ரூபாய் 5 இலட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதனையும் உயர்த்தி வழங்கக் கோரி ஊடகவியலாளர்கள் சார்பாக அளிக்கப்பட்ட கோரிக்கையினைப் பரிவுடன் பரிசீலித்து, அதனை ரூபாய் 10 இலட்சமாக உயர்த்தி வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
தமிழகத்தில உள்ள பத்திரிக்கையாளர்கள் முன் களப்பணியாளர்கள் என அறிவித்தார்கள். மேலும் அதை நடைமுறைப்படுத்தும் விதமாக சென்னையில் புதிதாக 100 ஆக்சிஜன் படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட மருத்துவமனையில் 50 படுக்கைகளை பத்திரிக்கையாளர்களுக்கு ஒதுக்கீடு செய்து பத்திரிக்கையாளர்களுன் நலன் காக்கும் முதல்வர் தலைமையிலான தமிழக அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் மாவட்ட ஆட்சியர்களுடன் பேசும்போது பத்திரிக்கையாளர்கள் முன்னுரிமை கொடுத்து பாதுக்காக்கப்பட வேண்டும் என முதலவராகிய தாங்கள் வலியுறுத்து வந்துள்ளீர்கள். இது அனைத்து தரப்பு மக்களுக்கு தங்களுடன் பத்திரிக்கையாளர்களும் பாடுபடுகிறார்கள் என்பதை அறிந்து நடவடிக்கைகள் எடுத்து வருவதற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், பத்திரிகைத் துறை மற்றும் அனைத்து ஊடகத் துறை நண்பர்களும் இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் தங்கள் பணியினைகவனமுடன் மேற்கொள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இத்தருணத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
இக்கோரிக்கையே, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் எண்ணைத்தையும், நான்காம் தூண் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், செய்தியாளர்களின் பாதுக்காப்பையும் வெளிப்படையாக உணர்த்துக்கின்றன.
தன்னையும் ஒரு பத்திரிகையாளன் எனக் கூறிக் கொள்வார் மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.
ஒரு பத்திரிக்கையாளனுக்குத் தான் தெரியும் ஒரு பத்திரிக்கையாளனின் கஷ்டம். கடந்த 9 மாதங்களில் உங்கள் ஊரில் உங்கள் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு மக்களின் தேவைகளை அறிந்து தேர்தல் அறிக்கையை ஒரு சிற்பியைப் போல் செதுக்கி, அப்போது ஊடகவியலாளர் படும்பாட்டினையும் கண்டுற்று தாய் உள்ளத்துடன், திமுக தலைவர், தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஊகடவியலாளர் அனைவரும் முன் களப்பணியாளர்கள் என அறிவித்து பத்திரிகையாளர்களை பெருமை கொள்ள செய்தீர்கள்..
தற்போது ரூ. 5000 ஊக்கத் தொகை, கொரோனா நோய்த் தொற்றினால் இறப்பு ஏற்படின், இழப்பீட்டுத் தொகையை 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்ட மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எங்களையும் தன் குடும்பத்தில் ஒருவராக இணைத்து பெருமை சேர்த்த பத்திரிகை துறைக்கு உயிர் மூச்சாய் இருந்து, உயிர் நீர் ஊற்றியமைக்கு ஊடகவியலாளர்கள் சார்பில் கோடான கோடி நன்றியையும், பாராட்டுக்களையும், வாழ்த்துதலையும் தெரிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.
கோரிக்கை
மேலும் தாலுகாக்களில் பணி புரியும் செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடையாள அட்டை மற்றும் பஸ் பாஸ் உள்ளிட்ட எந்தவித சலுகைகளும் இதுவரை வழங்காததால், அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த நிறுவனத்தின் அடையாள அட்டை அல்லது அலுவலக கடிதத்தை ஆதாரமாகக் கொண்டு ஊக்கத் தொகையை வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இதற்காகன வழிக்காட்டுதல்களை வெளியிட வேண்டும் என்றும், போலி செய்திகயாளர்கள் களையபடவேண்டும் என்றும், உழைக்கும் உண்மையான செய்தியாளர்கள் அனைவருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கிய சலுகைககள் முழுமையாக சென்றடைய வேண்டும் என்றும் கோரிக்கையும் நன்றியினையும் இதன் வாயிலாக தெரிவித்துக்கொள்கின்றேன்.
பத்திரிக்கையாளர்கள் நலன் காக்கும் தமிழக அரசுக்கும் தலைமை ஏற்று நடத்தும் மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவைக்கும் நன்றியினை, 1926 தொழிற் சங்க சட்டத்தின் கீழ் இயங்கும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவர் சார்பாகவும் நன்றியையும், தொடர்ந்து நல்லாட்சி புரிய வாழ்த்துக்களையும் தெரிவித்து பெருமை கொள்கின்றோம். செய்தியாளர்கள் தங்களது நல்லாட்சிக்கு என்று உறுதுனையாக பணியாற்றுவோம்.
தகப்பனை மிஞ்சிய தனயன் என்று பத்திரிக்கையாளர்கள் நலனை காக்கும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மீண்டும் கோடான கோடி நன்றினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவ்வாறு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.