சென்னை :
மாவட்ட பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் அடையாள அட்டையை வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவு.
பத்திரிக்கையாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் தரப்படும் வாக்குச்சாவடிகளில் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் உள்நுழைவு / மறு நுழைவிற்க்கான அதிகார கடிதத்தை பெறுவதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பித்த பிறகும் அனைவருக்கும் தராமல் ஒரு சிலருக்கு மட்டும் தந்துவிட்டு பத்திரிக்கை சுதந்திரத்தை பேணி பாதுகாத்து வரும் பல்வேறு பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பணிபுரிபவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. பிஆர்ஓக்கள் ஒரு தலைபட்சமாகவும், சர்வாதிகாரிகளாக பணியாற்றுவதாக ஒருமித்த குரலில் அனைத்து செய்தியாளர்களும் குற்றம் சாட்டினர்.
ஈரோடு மாவட்டம் உட்பட பிஆர்ஓக்களின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர்களிடம் செய்தியாளர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர்கள் கூறினார்கள். ஆனால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதையடுத்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மேற்கு தமிழக தலைவர் ஈ. தனஞ்ஜெயன், ஈரோடு என்.ஜே.யூ., நிர்வாகிகள், ஈரோடு மாவட்ட செய்தியாளர்கள் சட்ட ரீதியாக அனுக முடிவெடுத்து உச்சநீதிமன்ற வழகறிஞரும், தமிழ்நாடு முன்னேற்றக் கழகம் தலைவருமான எஸ்.கே. சாமி அவர்களிடம் இதுகுறித்து தெரிவித்தனர்.
இதனடிப்படையில், உச்சநீதிமன்ற வழகறிஞரும், தமிழ்நாடு முன்னேற்றக் கழகம் தலைவருமான எஸ்.கே. சாமி, தமிழக தலைமை தேர்தல் ஆணையர் திரு சத்யபிரதா சாகு அவர்கள் சந்தித்து புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் தெரிவித்தாவது,
வணக்கம், தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தல் 2021ல் ஆளுங்கட்சிக்கு சாதகமான தேர்தல் அதிகாரிகள், பல வாக்குச் சாவடிகளில் அரங்கேறிய அதிகார துஷ்பிரயோகம், பத்திரிக்கை சுதந்திரத்தை பறித்த அவலங்கள் தமிழகம் முழுவதும் அரங்கேறிய கொடுமைகள், வாக்குச் சாவடியை கைப்பற்றிய முன்னணி வேட்பாளர்கள் கேட்பாரற்று மௌனியாக வேடிக்கை பார்த்த வாக்காளர்கள் என்பதை நிரூபிக்கும் அளவில் 06.04.2021 அன்று வாக்குப் பதிவின் பொழுது பத்திரிகையாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் தரப்படும் வாக்குச் சாவடிகளில் உள்நுழைவு/ மறு நுழைவிற்கான அதிகார கடிதத்தை பெறுவதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் சமர்பித்தபிறகும் அனைவருக்கும் தராமல் வேண்டுமென்றே அந்தந்த மாவட்டங்களில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வருபவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் தரப்பட்டதோடு உள்ளதை உள்ளபடி எடுத்து கூறி பத்திரிக்கை சுதந்திரத்தை பேணி பாதுகாத்து வரும் பல்வேறு பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் பணிபுரிபவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக இந்த மனுவுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள ஈரோடு மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியான சதீஸ் குமார் மற்றும் துணை மக்கள் தொடர்பு அதிகாரியான சதீஸ் ஆகியோர் எத்தகைய அதிகார துஷ்பிரயோகம் செய்து உள்ளனர் என்பதற்கு இது ஒரு சிறு சான்றாகும், எனவே இவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி துறைரீதியான நடவடிக்கை எடுப்பதோடு செய்தி அலசல் நாளிதழ் நிருபர் திரு. R. கோபால், காலச்சக்கரம் நாளிதழ் நிருபர் E. தனஞ்ஜெயன், வணக்கம் தமிழகம் நாளிதழ் நிருபர் K. கார்த்திகேயன், கதிர்சுடர் நாளிதழ் நிருபர் K.செந்தில்குமரன், தினசங்கு நாளிதழ் நிருபர் தியாகராஜன், மக்களின் உரிமைக்குரல் நாளிதழ், நிருபர் கோவர்தனன், உள்ளாட்சி முரசு நாளிதழ் நிருபர் மூர்த்தி உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் அதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் விண்ணப்பித்த அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் பணிபுரியும் அனைவருக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பத்திரிக்கையாளர்களுக்கு தேவையான உள்நுழைவு / மறு நுழைவிற்கான அதிகார கடிதத்தை உடனே வழங்க முன்வரவேண்டும்.
வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பொழுது ஆளுங்கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் தேர்தல் அலுவலர்கள் போதிய கால அவகாசம் தந்து தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் உள்ள பிழைகளை திருத்தம் செய்து கொள்ளவும், தேவைப்படும் பட்சத்தில் உரிய தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது ஆனால் ஏனைய பிற அரசியல் கட்சிகளை பொருத்தளவில் ஒரு சிறு பிழை இருந்தால் கூட அவர்களின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதற்கு உதாரணமாக தற்போதைய வருவாய் துறை அமைச்சர், பிஜேபியை சேர்ந்த வேட்பாளர்களான அண்ணாமலை, வினோஜ். P. செல்வம் உள்ளிட்டோரை குறிப்பிடலாம்.
ஆளுங்கட்சி தங்களது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காகவும் பல குறுக்கு வழிகளை அரங்கேற்றிய வண்ணம் உள்ளது. தேர்தல் நாள் அன்று கூட சமூக வலைத்தளங்களில் தங்களது பரப்புரைகளையும் மற்றும் வாக்களர்களின் கைபேசி எண்களுக்கு குரல்பதிவை அனுப்பி வாக்காளர்கள் ஓட்டுபோட நிர்பந்தப்படத்தியுள்ளனர் அதற்கு உதாரணமாக ஸ்கிரீன் சாட் மற்றும் ஆடியோ பதிவு இந்த மனுவுடன் இணைத்து தரப்படுகிறது.
முன்னணி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வாக்காளர்களிடம் ஓட்டு பெற வேண்டும் என்பதற்காக பணத்தையும், டோக்கனையும் அள்ளி வீசியுள்ளனர் சில மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அதை கண்டும் காணாமல் இருப்பது ஜனநாயகத்தை கேளிக்கூத்தாக்கியுள்ளது.
பலர் கோடிக்கணக்கில் அரசு கஜானாவில் கொள்ளையடித்த மக்களின் வரிப்பணத்தை இந்த தேர்தலில் வாரி இறைத்துள்ளனர், சரியாக தேர்தல் செலவு கணக்கை காட்டாத அரசியல் கட்சிகள் அங்கீகாரத்தை ரத்து செய்யவும், வேட்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகளை முடுக்கிவிட தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும், பத்திரிக்கை சுதந்திரத்தை பேணி காத்து வாக்கு எண்ணிக்கையின் பொழுது 100சதவீத வெளிப்படைத் தன்மை பொதுமக்களுக்கும் மற்றும் வாக்காளர்களுக்கும் தெளிவு படுத்த முன்வர வேண்டும் என்ற கோரிக்கைகளை இந்த புகார் மனுவின் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
பத்திரிக்கையாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் தரப்படும் வாக்குச்சாவடிகளில் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் உள்நுழைவு / மறு நுழைவிற்க்கான அதிகார கடிதத்தை பெறுவதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பித்த பிறகும் அனைவருக்கும் தராமல் ஒரு சிலருக்கு மட்டும் தந்துவிட்டு பத்திரிக்கை சுதந்திரத்தை பேணி பாதுகாத்து வரும் பல்வேறு பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பணிபுரிபவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர்களின் உரிமையை பெற்றுத்தரும் நோக்கில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் தமிழ்நாடு முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு. டாக்டர். எஸ் கே சாமி ஜி அவர்கள் தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அவர்களுக்கு மனு அளித்து விட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்த நிகழ்வில் கூறினார்.
அனைத்து பத்திரிகையாளர்களும் உடனடியாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்லும் அடையாள அட்டை வழங்க உத்தரவு,
இதுகுறித்து உச்சநீதிமன்ற வழகறிஞரும், தமிழ்நாடு முன்னேற்றக் கழகம் தலைவருமான எஸ்.கே. சாமி கூறியதாவது,
அரசிடமிருந்தும் மற்றும் அதிகாரிகளிடமிருந்தும் பத்திரிக்கையாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊடக உரிமையை நிலைநாட்டுவதை தமிழ்நாடு முன்னேற்றக் கழகம் தனது லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
இது குறித்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் கூறியதாவது,
உச்சநீதிமன்ற வழகறிஞரும், தமிழ்நாடு முன்னேற்றக் கழகம் தலைவருமான எஸ்.கே. சாமி அவர்களுக்கு நன்றியினையும், வாழ்த்துக்களையும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் கூறியதாவது, தேர்தல் ஆணையத்தின் இந்த ஆணையை மதித்து இனியாவது, நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்கு செய்தியாளர்கள் அனைவருக்கும் பாரபட்சம் காண்பிக்காமல் அடையாள அட்டைகள் வழங்க வழிவகை செய்ய வேண்டும் .
இனியாவது தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் செய்தியாளர்களுக்கு வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு நேரில் சென்று செய்தி மற்றும் புகைப்படம் சேகரிக்க அடையாள அட்டைகள் வழங்க செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மறுத்ததால் தமிழகத்தில் நடந்த பல நிகழ்வுகள் வெளியில் வராமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த வாக்குப்பதிவு அமைதியாக அசம்பாவிதங்கள் இன்றி நடந்து முடிந்துள்ளது. நடந்த தேர்தல் குறித்து எந்த வித செய்திகளும் அதிகமாக வெளியாகவில்லை. இதற்கு முக்கிய காரணம் செய்தியாளர்களுக்கு முறையாக அடையாள அட்டை வழங்காமல் புறகணித்ததே...
ஆனால், தற்போது தேர்தல் நாளன்று அறிங்கேறிய சம்பங்கள் மெல்ல மெல்ல கசிந்து வருகின்றன... பல வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றிய பணியாளர்களுக்கு கழிப்பறை சுத்தமாக சரியில்லை என்றும், மின்விசிறி வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் குறைகள் கூறப்பட்டன. சமூக இடைவெளி மற்றும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக கடைபிடிக்கவில்லை... என்ற குற்றச்சாட்டும் பொதுமக்கள் வைத்துள்ளனர்.
அத்துடன் பல மையங்களில் குறிப்பாக வாக்கு செலுத்தச் சென்ற வாக்காளர்கள் விரல்களில் மை தடவாமல் அனுப்பிய கொடுமை நடந்தேறியுள்ளது. இவையெல்லாம் ஊடகங்களில் செய்தியாக வெளிவரவில்லை.
குறிப்பாக வேலூர் சங்கரன்பாளையம் டிகேஎம் மகளிர் கல்லூரி வளாகத்தில் செயல்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் பிற்பகல் 4.35 மணிக்கு மேல் வாக்களிக்கச் சென்ற வாக்காளர்களுக்கு அவரது விரல்களில் மை தடவாமல் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து காரணம் கேட்டால் மை தீர்ந்து விட்டது என்று கூலாக பதில் தெரிவித்துள்ளனர் தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள். இதனால் அங்கு வாக்குவாதமும் நடைபெற்றது. இதுபோன்ற செய்திகள் வெளிவராமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடித்தளமாக அமைந்தது வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் பல செய்தியாளர்களுக்கு வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று செய்தி மற்றும் புகைப்படம் சேகரிக்க தமிழக தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் அடையாள அட்டைகள் செய்தியாளர்கள் பலருக்கும் வழங்காமல் நிறுத்தப்பட்டதுதான் இதற்கு முழுமுதற்காரணம் ஆகும். தமிழகம் முழுவதும் இதேநிலைதான் அரங்கேறியுள்ளது. மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் அளவில்லா அதிகாரம் இருப்பது போன்று தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கின்றனர். இனியாவது, பிஆர்ஓக்கள், செய்தியாளர்களுக்காதான் இவர்களது பணி என்று உணர்ந்து செயலாற்றவேண்டும்.
இவ்வாறு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கூறியதாவது,
NJU மேற்கு தமிழக தலைவர் ஈ. தனஞ்ஜெயன் |
இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுத் தந்த உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர் ஐயா எஸ்.கே. சாமி ஜி அவர்களுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மற்றும் ஈரோடு அனைத்து பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துகொள்கின்றோம் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மேற்கு தமிழக தலைவர் ஈ. தனஞ்ஜெயன் கூறியுள்ளார். இதேபோன்று ஈரோடு மாவட்டச் செய்தியாளர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள செய்தியாளர்கள் நன்றியினை தெரிவித்துவருகின்றனர்.