உலக பத்திரிகை சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
எத்திசையும் எந்நிகழ்வும்,
எள்ளளவும் மாறாது எடுத்துரைக்கும்
எம் அருமை எழுத்துலக
சொந்தங்களுக்கு...!
செய்தியெனில் ஊணுமின்றி
உறக்கமுமின்றி, ஓடிச்சென்று
எடுத்தியம்பும் எழுதுகோல்களே..!
இரவுமில்லை பகலுமில்லை
நாடுயர உண்மைகளை
நயம் உரைத்து,
கேடு செய்வோர் பகை பிடித்து,
நீதியையும், நேர்மையையும்
இருவிழியாய் காத்துநின்று,
நான்காம் தூணுக்கு நற்பெயரை
நல்கிடவே நாள்தோறும் உழைத்திடும்
உம் எழுத்து சுதந்திரக்காற்றை சுவாசித்திட
உம் வாழ்வுயர வாழ்த்துகிறோம்..!
இனிய உலக பத்திரிகை சுதந்திர தின
நல்வாழ்த்துக்கள்..!
Dr. K. KUMAR,
NATIONAL PRESIDENT
NATIONAL JOURNALISTS UNION