காஞ்சிபுரம், ஜூன் 17-
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், மதுராந்தகம் பகுதியில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மண்டல தலைவர் ராமலிங்கம் தலைமையில், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் சூர்யா, மாவட்ட இணைச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உமாபதி மற்றும் மோசஸ் தலைமையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது.
செங்கல்பட்டு, உத்திரமேரூர், மதுராந்தகம் பகுதியில் இருந்து பத்திரிகையாளர்கள் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனில் உறுப்பினர்களாக தங்களை தாமாக முன்வந்து இணைத்து கொண்டனர்.
இந்த உறுப்பினர்கள் சேர்க்கை விழா செங்கல்பட்டு அரசு விருந்தினர் மாளிகையில் நடந்தது. பாலா, ராஜ் டிவி செங்கல்பட்டு, செங்கல்பட்டு தந்தி டிவி நிருபர் மகேந்திரன், காவேரி டிவி கேமராமேன் விநாயகம், திருக்கழுகுன்றம் ஜெ., நியூஸ் நிருபர் சீனு, ஈசிஆர் காவிரி சேனல் நிருபர் தாம்பரம் சங்கர், செங்கல்பட்டு நியூஸ் 7 நிருபர் சாலமன், செங்கல்பட்டு சங்கர், செங்கல்பட்டு பாலிமர் சேனல் அற்புதராஜ், கல்பாக்கம் சன் டிவி நிருபர் ஜாபர், கல்பாக்கம் மக்கள் தொலைக்காட்சி ஆறுமுகம், கல்பாக்கம் புதிய தலைமுறை டிவி விஜயன், மதுராந்தகம் சன் டிவி நிருபர் இளங்கோ, மக்கள் தொலைக்காட்சி மதுராந்தகம் மணிகண்டன், மதுராந்தகம் நியூஸ் 7 செந்தில்குமார், உத்திரமேரூர் பாலிமர் தொலைக்காட்சி சுரேஷ் உட்பட 60க்கும் மேற்பட்டோர் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனில் புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
இத்தகவலை மண்டல தலைவர் காஞ்சிபுரம் ராமலிங்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஜீவானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். புதிய உறுப்பினர்களுக்கு என்ஜேயூ தேசிய தலைவர் கா.குமார் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.