வேலூர், ஜூன் 28, 2019 :
பத்திரிகையாளரை தாக்கிய காவல் ஆய்வாளருக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் வெட்ட வெளிச்சம் அரசியல் புலனாய்வு மாத இதழின் துணை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதோடு மேற்கு மண்டல பொறுப்பாளர் ஆகவும் பணியாற்றுகிறார். அதுமட்டுமல்லாமல் என்ஜேயூவில் முக்கிய பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவர் வெட்ட வெளிச்சம் அரசியல் புலனாய்வு மாத இதழில் ஈரோட்டில் கொடிகட்டி பறக்கும் விபச்சாரம் என்ற தலைப்பில் ஆர்.ஆர். லாட்ஜ் பற்றி செய்தி வெளியிட்டிருந்தார்.
இச்செய்தியை வெளியிட்டு வெட்ட வெளிச்சம் மாத இதழ் வெளியீடு வரவே இல்லை. பிடிஎஃப் ஃபைல் மட்டும் அனுப்பி இருந்தார். அந்த லாட்ஜ் மீது நடவடிக்கை எடுக்காத ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வெட்ட வெளிச்சம் அரசியல் புலனாய்வு துணை ஆசிரியர் சுரேஷ் வீட்டுக்கு பத்துக்கும் மேற்பட்ட காவலர்களை அனுப்பி தீவிரவாதியைப் போல ஏன் கொலைக்குற்றவாளியை விட மிகவும் கொடூரமாக இழுத்துச் சென்றுள்ளனர்.
இது முன்விரோதத்தில் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் செய்தி வந்த ஆத்திரத்தில் அவருடைய இல்லத்தில் அத்துமீறி புகுந்து சுரேஷை அடித்து உதைத்து டவுன் போலீஸ் நிலையத் திற்கு அழைத்து சென்று அவரை சித்ரவதை செய்துள்ளார். அதாவது பின்பக்கமாக கொண்டு சென்று அவரை கடுமையாக தாக்கி அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார் கடமை தவறாத அந்த காவல் ஆய் வாளர் பன்னீர் செல்வம்.
அத்தோடு விட்டுவிடாமல் சுரேஷை கோயம் புத்தூர் மத்திய சிறையில் காவலில் அடைத் தனர். சுரேஷை ஒரு பத்திரிகையாளர் என்று கூட பார்க்காமல் அவரை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய காவல் துறையின் மீது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். காவல் துறையில் கையில் வைத்துள்ள முதல்வர் இதற்கு துணை போகக் கூடாது.
தவறும் பட்சத்தில் பத்திரிகையாளர் நலன், பாதுகாப்பு பறிக்கப்படுவதற்கு சமமாகி விடும். பத்திரிகையாளர்களை காவல் துறையினர் தாக்குவதற்கு எவ்வித உரிமையும் இல்லை. அத்துமீறி நடந்து கொள்வது காவல் துறையாக இருந்தாலும் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பிரைவேட் கேஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் என்ஜேயூ சார்பில் தொடுக்கப்படும். காவல் துறை அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்களும் சட்டத்தின் முன் சமம் என்பதை மறந்து சட்டத்தை மீறி செயல்படகூடாது. சட்டத்தை காக்கதவறும் காவல்துறையினர் மீது சட்டரீதியாக சந்திக்க என்.ஜே.யூ. நடவடிக்கையை முன்னெடுக்கும் என்பதை இதன் வாயிலாக தெரிவித்து கொள்கிறேன். ஆதலால் உடனடியாக தமிழக அரசு சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கா விட்டால் தமிழகத் தில் உள்ள அனைத்து பத்திரிகை யாளர்களும் ஒன்று கூடி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
அதுமட்டுமில்லாமல் என்ஜேயூவின் உறுப்பினர்கள் மீது பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக சட்டத்துக்கு புறம்பாக நடந்துகொண்டால் அதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். அவர்களை சட்டரீதியான விசாரணைக்கு உட்படுத்தி தண்டனையை பெற்றுத் தராமல் என்ஜேயூ ஓயாது என்பதை ஆணித்தரமாக தெரிவித்து கொள்கிறேன்.
அரஸ்ட் வாரண்ட் இல்லாமலும், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமலும் சுரேஷ் வீட்டுக்குள் காவல்துறையினர் புகுந்து கைது செய்தது, அவரை அடித்து துன்புறுத்தியது, அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும். செய்தி வெளியிடுவது குற்றம் என்று எந்த சட்டத்திலும் சொல்லவில்லை. கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் சுதந்திர நாட்டில் அனைத்து மக்களுக்கும் உண்டு. இதை பத்திரிகையாளர் கையாண்டதில் என்ன தவறு உள்ளது என்று தெரியவில்லையே. காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம் யாரையோ திருப்திபடுத்த இந்த இழிசெயலில் ஈடுபட்டுள்ளார் என்பது வெட்டவெளிச்சமாக தெரியவந்துள்ளது. எனவே காவல்துறையில் கண்மூடித்தனமான போக்கு கண்டிக்கதக்கது. செய்தியாளர்கள் மீது கை வைப்பதற்கு முன்னர் யோசிக்க வேண்டும். சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். சட்டத்தை மீறி நடந்தால் சட்டம் தன் கடமையை அந்த காவல் ஆய்வாளர் மீது பாயும் என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும். அந்த காக்கிச் சட்டையை அந்த காவல் ஆய்வாளர் வாழ்நாளில் போட இயலாதவாறு நடவடிக்கை எடுக்க வைக்க என்ஜேயூ அனைத்து வழிகளிலும் சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கும் என்பதை அவர் மட்டுமல்ல காவல் துறையில் பணியாற்றும் மற்ற சகோதரர்களும் மறந்துவிடக் கூடாது.
அதிகாரம் கையில் உள்ளது என்று தான்தோன்றிதனமாக நடந்துக்கொள்ளகூடாது. பணிவு, உண்மை, உழைப்பு காவல் துறையினரிடம் இருக்க வேண்டும். லாட்ஜ் உரிமையாளருக்கு வாலாட்டும் இதுபோன்ற கரும்பு ஆடுகளால்தான் காவல் துறையின் பெயருக்கு களங்கம் வந்து சேருகிறது. ஏன் லாட்ஜ் உரிமையாளரிடம் இதுநாள் வரை எந்தவிசாரணையயும் நடத்தவில்லை காவல் துறை என்ற சந்தேகம் கவல் துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகளுக்கு இதுநாள் வரை எழவே இல்லையா?. லாட்ஜ் உரிமையாளர், மேலாளரை கைது செய்வதை விட்டு விட்டு செய்தியாளர் மீது அத்துமீறி நடந்து கொண்டதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். பன்னீர்செல்வம் எங்கு சென்றாலும் அவர் தப்பிக்க முடியாது. செய்தியாளர்கள் மீது தவறான பொய்யான வழக்குகளை ஜோடித்து தயார் செய்து புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக நடிப்பு காண்பிக்கும் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறேன்.
காவல் துறையை ஏவி விட்டு பத்திரிகையாளரை தாக்கியுள்ள செயல் கண்டனத்துக்குரியது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் பத்திரிகையாளர்களை கிள்ளுக்கீரைகளாக நினைத்து செயல்படுகிறார் போலும். இதற்கு முன்னர் இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் பத்திரிகையாளர்களின் தெய்வம் போன்று திகழ்ந்தார். ஆனால் சக்திகணேசனோ எடுப்பார் கைப்பிள்ளை போன்று இயக்குகிறார். காவல் துறையில் இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்து விடமுடியாது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சட்டத்தை மதித்து நடந்து கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவம் அருவெறுக்கத்தக்கது. அர்ப்ப பணத்துக்கு ஆசைப்பட்டு இதுபோன்ற தவறான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வந்த கடமை வீரருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தி தகுந்த தண்டனையை பெற்றுத்தராமல் ஓய மாட்டேன் என்று தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு கா.குமார் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி இதுபோன்ற செயல்கள் இனி அரங்கேறாமல் இருக்கவேண்டும். செய்தியாளர்கள் தொடர்ந்து காவல்துறையினரால் தாக்கப்படுவதும், பொய்யான வழக்கு தொடுப்பதும் தொடர்கதையாக உள்ளது.
இதுகுறித்து காவல்துறைத் தலைமை இயக்குநர் (Director General of Police) நடவடிக்கை எடுக்கவேண்டும். அடுத்து வரும் காவல்துறைத் தலைமை இயக்குநர் செய்தியாளர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும், ஜனநாயகத்தை காப்பாற்றவேண்டும் என்றும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா. குமார் வலியுறுத்தியுள்ளார்.