சென்னை அடுத்த அண்ணா நகர் ஆபீஸர் காலனியில் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான அஜய் உயர்நிலைப் பள்ளியில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கல்வி பயில்கின்றனர்.
இவர்களுக்கு பயன்படும் வகையில் பொது அறிவு புத்தகங்களை நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவரும், வெல்கம் பவுண்டேஷன் நிறுவனரும், காலச்சக்கரம் நாளிதழின் நிறுவனருமான கா.குமார் அவர்கள் இன்று வழங்கினார்.
அருகில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தமிழ் மாநிலத் தலைவர் பா.ரமேஷ் ஆனந்தராஜ், மாநிலச் செயலாளர் ஜெ. பிரேம்குமார், மாநில பொருளாளர் ரமேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் ந.எழிலரசன் மற்றும் முரளி.