காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படையின் ஈவு இரக்கமின்றி திடீர் தாக்குதலால் துடிதுடித்து பரிதாபமாக வீரமரணம் அடைந்த நம் சகோதரனாக, நண்பனாக, உறவாக நம்மையும், நம் தாய் நாட்டையும் காத்திட்ட இராணுவ வீரர்களுக்கு வீரவணக்கத்துடன் அவர்களது ஆன்மா சாந்தியடைய இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்-.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்ளும் இந்நேரத்தில் அவர்களது குடும்பத்துக்கு இறைவன் நல்லருள் புரிந்து துணையாக இருக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து, நம் சகோதரன் குடும்பத்துக்கு நாட்டு மக்களாகிய நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றும் உறுதியேற்க கடமைப்பட்டுள்ளேன்.
பெற்ற தாயை தவிக்கவிட்டு...
மனைவி மக்களை மறந்துவிட்டு...
உற்றார் உறவினர்களை உதறி தள்ளிவிட்டு...
சுக துக்கங்களையும் துறத்திவிட்டு...
நாட்டிற்காக நாட்டில் உள்ள நமக்காக
பாலையிலும் பாறையிலும்
பனியிலும் கடலிலும்
உறைந்த இதயத்தை சுமந்து
எல்லையை காத்தவன்
இப்பொழுது
வெளியேறிய இரத்தம் உறைந்துகிடக்க
அவனது குடும்பம் கண்ணீரில் உருக
இரத்தமும் கொதிக்குது இதயமும் வெடிக்குது
கதறிடும் தளிர்கண்டு கண்ணீரில் நம்நாடு
எங்களைக் காத்தவர் இன்னுயிர் நீத்தவர்
தேசநலன் நினைத்தவர் தாக்குதலில் மாண்டவர்
இந்தியராய் இணைந்து எதிரிகளை வெல்வோம்
உயிர்தந்த தியாகிகளை உள்ளவரை மறவோம்
கண்ணீர் அஞ்சலியுடன்
நம் நாட்டிற்கு உயிர்தியாகம் செய்த
இராணுவ வீரர்களுக்கு வீரவணக்கங்கள்...!!!
டாக்டர் கா. குமார்
தேசிய தலைவர்
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன்