Search This Blog

Translate

தன்னிலை மறந்து செயல்படும் வேலூர் பிஆர்ஓ

வேலூர், செப். 3, 2018:

வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளங்கோவன் அரசியல் கட்சித்தலைவர்களின் பிரஸ் மீட்களுக்கு ஏற்பாடு செய்வதும் அதில் அவர் கலந்து கொள்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். அவர் மேற்கொண்டு வரும் முறைகேடுகள் குறித்தும் செய்திகள் வெளியிட்டும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து அமைதி காத்து வருவதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.


வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக கடந்த இரண்டு ஆண்டுகளாக இளங்கோவன் பணியாற்றி வருகிறார். அவர் இம்மாவட்டத்துக்கு பணியமர்த்தப்பட்ட பின்னர் அவரது அரசு பதவியை பல்வேறு முறைகேடுகளுக்கு பயன்படுத்தி வருகிறார். மாவட்ட ஆட்சியரின் பயண குறிப்புகள் போன்றவற்றை செய்தியாளர்களுக்கு அளிப்பதில் காலம் தாழ்த்துகிறார். அரசு நலத்திட்டங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் இவர் முழு கவனம் செலுத்துவதில்லை. 

பிஆர்ஓ இளங்கோவன் அலுவலக நேரத்தில் பெரும்பாலும் அவர் அலுவலகத்தில் இருப்பதில்லை. மாறாக வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் அமருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இந்த பெட்டிக்கடையில் மினி டாஸ்மாக் நடத்துவதற்கு பின்புலமாக பிஆர்ஓ இளங்கோவன் செயல்படுகிறார். மாவட்ட அலுவலராக உள்ள இளங்கோவன் பெட்டிக்கடையில் அமருவதை பயன்படுத்தி ஆக்கிரமிப்பு கடையில் சமூக விரோதிகள், போலி நிருபர்கள் அமர்ந்து கொண்டு சட்டவிரோத செயல்களை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பாள்களில் பலருக்கு செய்தியாளர்களுக்கு வழங்கப்படும் வாகன ஸ்டிக்கர் போன்றவற்றை பிஆர்ஓ அளித்துள்ளார். போலி நிருபர்கள் என்ற போர்வையில் கையெழுத்துக்களை போட்டு ஸ்டிக்கர்களை பெற்றுக் கொண்டுள்ளனர். இந்த ஸ்டிக்கர்கள் வழங்க தலா ரூ.2 ஆயிரம் வரை ஒருவரிடம் இருந்து வசூல் செய்கிறார். இதுகுறித்து தகவலறிந்த மூத்த செய்தியாளர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.

அங்கீகரிக்கப்படாத, வெளிவராத பத்திரிகைகளின் பெயரைச் சொல்லி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு பஸ் பாஸ் உள்ளிட்டவை வழங்கியிருக்கிறார். இதற்காக அவர்களிடம் இருந்து தலா ரூ.ஐந்தாயிரம் பெற்றுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. வேலூர் மாவட்டத்துக்கு வருகை தரும் அரசியல் கட்சித்தலைவர்களின் நிகழ்ச்சிகளுக்கு அரசு பிஆர்ஓ இளங்கோவன் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவிப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 22.08.2018 என்று வேலூரில் உள்ள ஜிஆர்டி நட்சத்திர விடுதிக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர், நடிகர் ஆர்.சரத்குமார் வந்திருந்தார். அப்போது பத்திரிகையாளர்களை மாலை 6.30 மணிக்கு சந்திக்க இளங்கோவன் பின்னணியாக இருந்து செயல்பட்டதோடு சரத்குமாரின் பிரஸ் மீட்டில் இளங்கோவனும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஆர்ஓ இளங்கோவன் பிரஸ் மீட்டில் கலந்து கொண்டதற்கான வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் வெளிவந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி அமமுக துணை பொதுச்செயலர் டிடிவி.தினகரன் கடந்த 19.08.2018 அன்று வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகர் பார்ச்சூன் நட்சத்திர விடுதிக்கு பிஆர்ஓ இளங்கோவன் சென்று அவரை சந்தித்து விட்டு வந்துள்ளார். அப்போதும் பிரஸ் மீட் நடந்துள்ளது. செய்தியாளர்களுக்கு சலுகை விலையில் அரசு வழங்கும் வீட்டுமனைப் பட்ட வழங்கிட வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இவ்வேளையில் இளங்கோவன் மனை ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று செய்தியாளர்கள் சிலரிடம் இரட்டையர்கள் புரோக்கர்கள் மூலம் கேட்டுள்ளார் என்ற தகவல் காட்டுத்தீ போல வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.

உள்ளூர் அமைச்சர் கே.சி.வீரமணி நிகழ்ச்சிக்கு கூட பிரஸ்காரர்களை அழைத்து போவதில்லை. பிரஸ் ரிலீசும் முறையாக அவர்களுக்கு கொடுப்பதில்லை. புகைப்படங்கள் தருவதே இல்லை. மாவட்ட பிஆர்ஒ என்கிற வகையில் இளங்கோவனுக்கு ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பாக கதவு எண்: 282 என்ற வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மேற்படி பிஆர்ஓ சத்துவாச்சாரி பகுதி மூன்றில் கதவு எண்:514 என்ற விலாசத்தில் பத்தாயிரம் ரூபாய் மாதவாடகைக்கு பங்களா எடுத்து அங்கு அவ்வப்பொழுது அந்த பங்களாவில் தங்கி வருகிறார். அங்கு விசாரணை நடத்தினால் அவரது ஒழுங்கீனம் பற்றி தெரியவரும்.

பிஆர்ஓ இளங்கோவனுக்கு அரசு அளித்திருக்கும் வாகனத்தில் அடிக்கடி சேலம் சென்று வருகிறார். ஓட்டுநராக குமார் என்பவர்தான் சென்று வருகிறார். (கிருஷ்ணகிரி டோல்கேட்டில் விசாரித்தால் பதிவும் நிரூபிக்கும்). சில நேரங்களில் சேலத்தில் ஒரு வாரம் வரையில் தங்கி விடுகிறார். இதனால் ஓட்டுநருக்கு சிரமம் ஏற்படுவதோடு வேலூர் மாவட்டத்தில் பிஆர்ஓ கையெழுத்திட வேண்டிய கோப்புகள் தேக்கம் காண்கிறது. கடந்த 04.05.2018 தேதியன்று இந்திய குடியரசு தலைவர்   மேதகு ராம்நாத் கோவிந்த்  வேலூரில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்தார். அப்போது பிஆர்ஓ இளங்கோவன் பாதுகாப்பு அம்சங்களை வைத்து கொள்ளாமல் வெளிவராத பத்திரிகைகளின் பெயரில் பலரை குடியரசு தலைவர்  நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செய்தார் இந்த பலே கில்லாடி பிஆர்ஓ இளங்கோவன். 

ஆகவே , செய்தித்துறை இயக்குநர் சங்கர், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் பலரும் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.  செய்தியாளர்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் கேட்பதே இல்லை. பிஆர்ஓ இளங்கோவனை பார்த்து மாவட்ட ஆட்சியர் ராமன் அஞ்சி நடுங்குகிறார். இது ஏன் என்பது தெரியவில்லை.  இதுபோன்ற புரியாத புதிருக்கு விடை கிடைப்பது எப்போது என்பதுதான் பல உண்மையான செய்தியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.  இதற்கு பிறகும் பிஆர்ஓ இளங்கோவன் மீது அரசும், செய்தித்துறையும் , மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(180)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !