✨ தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்து ✨
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று போற்றப்படும் பத்திரிகைத் துறை,
நாட்டின் மக்கள் நலனுக்கும்,
சமூக விழிப்புணர்வுக்கும்,
உண்மை வெளிப்படுத்துதலுக்கும்
முக்கிய பங்கு வகிப்பது பெருமைக்குரிய ஒன்று.
நம் நாட்டில் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் மற்றும் பல்வேறு டிஜிட்டல் ஊடகங்களில் பணிபுரியும்
நிருபர்கள், ஆசிரியர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக் கலைஞர்கள்
ஆகிய அனைவரும் —
மக்களின் நலனுக்காக இரவு பகல் பாராமல்,
அர்ப்பணிப்புடன்,
பத்திரிகைத் தர்மத்தை கடைப்பிடித்து
கடின உழைப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
பத்திரிகைத்துறையின் உயர்வும் நம்பகத்தன்மையும்
அதை நடத்துபவர்களின் பண்பாட்டிலும்,
பொறுப்புணர்விலும்,
தொழில்முறை நெறிமுறைகளிலும் உள்ளது.
எனவே,
இந்த தேசிய பத்திரிகையாளர் தினத்தையொட்டி,
அனைத்து பத்திரிகையாளர்களும்
பத்திரிகைத் தர்மத்தோடு தங்கள் பணி தொடர,
தாங்களும் பத்திரிகைத்துறையும்
மேலும் மேலும் முன்னேறி சிறக்க
என் இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
– ஜி. கே. ராஜா
மாநில இணைச்செயலாளர்
NJU – நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன்
.png)
