கரூர்:
- கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட துரதிஷ்டவசமான நெரிசல் சம்பவம் காரணமாக பலர் உயிரிழந்த செய்தி நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனையும், மக்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
- மக்களின் ஆர்வத்தால் நிரம்பியிருந்த அரங்கம், ஒருசில நிமிடங்களில் சோகக் களமாக மாறியது. பல உயிர்கள் பலியானது மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் முனைவர் கா.குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஒரு அரசியல் கூட்டம் என்பது மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையை வெளிப்படுத்தும் அரங்கமாகும். அங்கு மக்கள் தங்கள் தலைவர்களைப் பார்க்கவும், கருத்துகளை கேட்கவும் ஆர்வமுடன் கூடுகிறார்கள். ஆனால், அவ்வாறான சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை என்றால், அந்த மக்களின் ஆர்வமே துயரமாக மாறுகிறது. கரூரில் நிகழ்ந்த இச்சம்பவம் அதற்கே ஓர் உணர்வு பூர்வமான சாட்சியம்.
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில், இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து குடும்பங்களிடம் திரும்பி வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.
இந்த நிகழ்வு அரசியல் கட்சிகளுக்கும், நிர்வாகத்திற்கும் மிகப் பெரிய எச்சரிக்கை மணி.
மக்கள் கூடும் நிகழ்வுகளில்:
- பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்
- அரசு மற்றும் காவல்துறை ஒருங்கிணைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும்
- அரசியல் கூட்டம் மற்றும் ரோடு ஷோ நடத்துபவர்களும் தங்கள் சார்பில் அவசர மருத்துவ வசதிகளையும், ஆம்புலன்ஸ் வசதிகளையும் கட்டாயம் ஏற்பாடு செய்ய வேண்டும்
- அரசும் அவசர மருத்துவ வசதிகள் உடனடியாக கிடைக்கச் செய்ய வேண்டும்
இவை பின்பற்றப்படாதபோது, மனித உயிர்களின் விலை கேள்விக்குறியாகி விடுகிறது.
ஒரு தலைவரை பார்க்க மக்கள் தங்கள் உயிரையே ஆபத்துக்கு உட்படுத்த வேண்டிய நிலைமை ஜனநாயகத்திற்கு அவமரியாதை. கூட்டங்கள் நடத்துவது அரசியல் கட்சிகளின் உரிமை; ஆனால் மக்களின் உயிரைக் காக்கும் பொறுப்பு அவர்களது கடமை.
இவ்வாறான துயர சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதபடி, அரசியல் தலைவர்களும், நிர்வாகமும் உண்மையான பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மக்களின் உயிர் பாதுகாப்பே எந்தக் கூட்டத்தின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை இச்சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.
எனவே, எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து அரசியல், மத, பொதுக் கூட்டங்களிலும் பாதுகாப்பு, ஒழுங்கு, மருத்துவ அவசர உதவி ஆகியவை மிகக் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்பதை இந்த இரங்கல் அறிக்கையின் மூலம் வலியுறுத்துகிறோம்.
இந்தக் கடினமான நேரத்தில், உயிரிழந்தோரின் குடும்பத்தாரின் துயரத்தை பகிர்ந்து கொண்டு, அவர்களுக்கு தேவையான அனைத்துவிதமான உதவிகளையும் அரசு மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகள் உடனடியாக வழங்க வேண்டுகிறோம். பாதுகாப்பு நடவடிக்கைகளில் முன்னெச்சரிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமான ஒன்று என்பதை இச்சம்பவம் மீண்டும் உணர்த்துகிறது.
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன், மக்கள் சார்பில் இந்த கேள்வியை முன்வைக்கிறது:
“ஒரு தலைவரை பார்க்க மக்களும் உயிரையே பணயம் வைக்க வேண்டுமா..?”
இது அரசியல் சமூகத்தையும், நிர்வாகத்தையும் சிந்திக்க வைக்கும் கேள்வியாகும்.
For English Reader
Karur: Vijay Rally Stampede
Condolence Statement by the National Journalists Union
In Karur district, a tragic stampede occurred during the political rally of leader Vijay, resulting in multiple casualties. This unfortunate incident has deeply shocked and grieved both the National Journalists Union (NJU) and the public.
The venue, initially filled with enthusiastic supporters eager to see their leader, turned into a scene of sorrow within minutes. The loss of several lives has caused immense grief and shock, the NJU President Dr. K. Kumar expressed in his condolence statement.
According to Dr. K. Kumar, a political rally is a platform for people to exercise their democratic rights. People gather with excitement to see their leaders and voice their opinions. However, if adequate safety measures are not in place, this enthusiasm can tragically turn into disaster. The Karur incident serves as a grim reminder of this reality.
The National Journalists Union extends its deepest condolences to the families of the deceased and prays for the souls of the departed to rest in peace. We also pray for the swift recovery of the injured so they can return safely to their families.
This incident is a major warning for political parties and administrative authorities. In all gatherings where people assemble:
- Strict safety measures must be implemented.
- Coordination between the government and law enforcement must be strengthened.
- Political parties and organisers of rallies and roadshows must ensure the provision of emergency medical facilities and ambulance services.
- The government must ensure immediate access to emergency medical care.
Failure to implement these measures raises serious questions about the value placed on human life. No one should risk their life just to see a political leader. While holding rallies is the right of political parties, protecting the lives of citizens is their foremost responsibility.
To prevent such tragic incidents from happening again, political leaders and administrative authorities must act with genuine responsibility. The safety of people must always remain the top priority at any public, religious, or political gathering.
In this difficult time, the NJU stands with the families of the deceased, urging the government and relevant authorities to provide all necessary support. This incident serves as a stark reminder that proactive safety measures are not optional—they are essential.
The National Journalists Union, on behalf of the people, raises a critical question:
“Should people risk their lives just to see a leader?”
This tragic incident calls for serious reflection by both the political and administrative communities. Dr. K. Kumar, President of the National Journalists Union, has issued his condolences along with this important question for society.