இன்று பிறந்த நாள் காணும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன்
கடலூர் மாவட்டச் செயலாளர் திரு. ராகுலன் அவர்களுக்கு...
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
அஞ்ஞானம் அகன்று
ஆழ்ந்து கற்றிடுவீர்
இறுமாப்பாய் உலவி
ஈறுவரை புகழ்பெற்று வாழ்ந்திடுவீர்
ஊருணியாய்ப் பிறருக்குப் பயன்பட்டு
எஞ்ஞான்றும் சிறந்திடுவீர்
ஏதின்றி மொழிந்திடுவீர்
ஐயம் அகற்றித் தெளிந்திடுவீர்
ஒப்புமையின்றி உயர்ந்திடுவீர்
ஓதிஞானம் பெற்று
ஒளதாரியனாய் வாழ்ந்திடுவீர்..!
அன்பும் ஆயுளும்
இன்பமும் ஈகையும் பெருகி
உற்றார் ஊரார் போற்ற
எந்நாளும் ஏற்றம் கண்டு
ஐம்புலனை வென்று
ஒப்பற்ற ஓங்காரமாய்
ஒளதாரியனாய் வாழந்திடுவீர்..!
புன்னகை நிறைந்த முகத்தோடும்
மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும்
எப்போதும் இன்பமாய்
வாழ்வாங்கு வாழ்தல் வேண்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
வாழ்த்தும் உள்ளங்கள்✍
💐 தலைவர் டாக்டர் கா.குமார்
நிர்வாகிகள், உறுப்பினர்கள்
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் குடும்பத்தினர்