திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதி மாலை முரசு தொலைக்காட்சி செய்தியாளராக பணியாற்றி வந்த சந்தானம் (32), அவர்கள் டிசம்பர் 16ம் தேதியன்று பூண்டி அருகே சாலை விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயங்களுடன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி டிச. 17ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்துள்ளனர்
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் மூத்த மற்றும் இளம் பத்திரிகையாளர்கள் சார்பிலும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பாகவும் காலச்சக்கரம் நாளிதழ் சார்பாகவும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.