பாசத் தலைவனுக்கு பிறந்த நாள்
இன்று நமக்கெல்லாம் பொன்னாள்,
வேலூர் ஈன்றெடுத்த
வெள்ளி முத்து உதித்த நாள்,
தங்கமாய், வைடூரியமாய்,
மாணிக்கமாய் மலர்ந்த நாள்.
வழிநடத்த ஆள் இல்லையே என
ஏங்கி தவித்தோம்
நான் இருக்கிறேன் என்று எங்களை தாங்கி பிடித்தாய்!- தலைவா
கடைசி தோழனிடம் கூட
கனிவாய் பேசி இயக்கம் வளர்க்கும்
தலைமை பண்பை பார்த்து பிரமித்து போனோம்,
சமூக வலைதளம் வளர்ச்சி
நம்மில் பலரை காணடித்தது,
சுதந்திரத்தை தொலைத்து வருகிறோம்
பேனா கூர்மையை இழந்து விட்டோம்,
எதற்காக இத்துறைக்கு வந்தோம்,
என்னத்தை சாதித்தோம்
எதுவும் இல்லை.
ஏதோ ஒன்றில் சமரசம்
விருப்பு வெறுப்பாகிவிடுகிறது
வெறுப்பு விருப்பாகி விடுகிறது
விருப்பும் வெறுப்புமின்றி செயல்படுவோம்
என்ற உறுதியை தொலைத்தோம்.
புகழ் மட்டுமே நம்முடன் சேர்கிறது
ஏழ்மை மட்டும் நம்மை விட்டு அகல மறுக்கிறது,
புகழ் செல்வம் 2ம் தண்டவாளம்
வாழ்க்கை என்ற ரயில் ஓட
இவை இரண்டும் சேர வேண்டும்.
ஒன்று சேர்கிறது,
மற்றொன்று விலகி செல்கிறது.
போட்டிகளும் பொறாமைகளும்
தொடர்ந்து துரத்துகிறது,
நம் வளர்ச்சி
நட்பு என்ற துரோகத்தால்
பாதாளத்தில் தள்ளப் படுகிறது
நம் கொள்கை மதுவிற்கும் மாமிசத்திற்கும்
அடகு வைக்கப்படுகிறது,
கவர் என்ற பெயரில்
நம் கோட்பாடு பறிக்கப்படுகிறது,
அதனையே சுட்டி கிண்டலும்,
கேளியும் நம்மை துரத்துகிறது,
போலிகள் படையெடுக்கின்றனர்,
இங்கே உழைப்பு மொத்தமும் களவாடப்படுகிறது,
பொது வெளியில் மரியாதை
வேண்டி வருகின்றனர் சிலர்,
காவல் துறைக்கு கையாளாகி
கட்ட பஞ்சாயத்து நடத்துகின்றனர் சிலர்,
அதிகாரிகளை மிரட்டி வழிபறி செய்கின்றனர் பலர்,
பெண்களுடன் இணைத்து பேசி கையாடல் செய்கின்றனர் சிலர்,
ஏண்டா நிருபர் ஆனே என்றேன் நான்,
எல்லாம் பயப்படுவார்கள் என்கிறான் அவன்...
எங்கே செல்கிறது 4 வது தூண்
மற்ற தூண்கள் சாயலாம்
இந்த 4ம் தூண் சாயலாமா
பணம் புகழ் வெளிச்சத்திற்கு மயங்கலாமா
மயங்கிவிட்டோமே!
காரணம்
உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கலையாம்...
இப்படி நமக்குள் குறைகள் பல,
அவற்றை களையவே நீவீர் வந்(த)தாய்
இந்த நன்னாளில் உதித்தாய்...
உங்கள் நல்ல உள்ளத்திற்கு சான்று,
தேசிய பத்திரிகையாளர் சங்கம்,
வெல்கம் பவுண்டேஷன்,
காலச் சக்கரம்
இன்னும் பிற
எத்தனை எத்தனை பிறப்பெடுத்தாலும்
இவ்வாழ்வு மீண்டும் மீண்டும்
தங்களுக்கு கிடைத்திட வேண்டும்,
நீங்கள் எங்களுக்கு என்றும் தலைவராகிட வேண்டும்.
நீங்கள் வாழ்க!
உங்கள் புகழ் ஓங்குக!
குடும்பம் வாழ்க!
குலம் ஓங்குக!
என்று வாழ்த்தும்
வீரா ✍
மண்டல செயலாளர், NJU
கடலூர்