கடலூர் ஏப்.13-
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன்(NJU) கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் செயற்குழு கூட்டமும், புதிய நிர்வாகி தேர்தலும் நடைபெற்றது. இக்கூட்டம் கடலூர் மாவட்ட தலைவர் கே.சங்கர் தலைமையில் இன்று (13/04/2022) நடைப்பெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் ஜி.ஜே.குமார், மாநில இணைச் செயலாளர் சி.கே.ராஜன், மாநில ஒருங்கிணைப்பாளர் ச.முத்துக்குமார், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஜி.கே.ராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
என்.ஜே.யூ., சங்கத்தின் தோற்றம் விதிமுறைகள் நடைமுறைகள் உள்ளிட்டவற்றை விரிவாக ஆலோசனை கூட்டத்தில் உரையாடினர். சங்கம் வழிநடத்தும் முறைகள் மற்றும் வளர்ச்சி குறித்தும், உறுப்பினக்கள் நலன்கள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் போட்டியிடுவதற்கான உறுப்பினர் படிவங்கள் மாநில இணை செயலாளர் சி.கே.ராஜனிடம் வழங்கியதன் அடிப்படையில் போட்டி இல்லாத காரணத்தினால் மாவட்ட தலைவராக கே.சங்கர், மாவட்ட செயலாளராக டி.ராகுலன், மாவட்ட பொருளாளராக என்.முருகவேல், மாவட்ட துணைத் தலைவராக ஆர்.வெங்கடேசன், துணை செயலாளராக ஐ.நாகமுத்து செயற்குழு உறுப்பினர்களாக 11 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கு மாநில துணைத்தலைவர் ஜி.ஜே.குமார் வாழ்த்துக்களையும் செயல்பாடுகள் பற்றியும் விவரித்தார். இக்கூட்டத்தில் மண்டல செயலாளர் எல். வீரபாண்டியன், மண்டல இணை செயலாளர் என். முருகானந்தம், மூத்த பத்திரிகையாளர் சி.எஸ்.முருகன், டி.பிரேம் ஆனந்த் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினார்கள்.
இறுதியில் முன்னாள் மாவட்ட செயலாளர் சிவப்பிரகாசம் புதிய உறுப்பினர்களை உற்சாகப்படுத்தினார்.