சென்னை, மார்ச் 21, 2018:
புதிய பார்வை இதழின் ஆசிரியர் நடராஜனின் மறைவுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின் அகில இந்திய தலைவர் கா.குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த பல மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜன் நேற்று அதிகாலையில் சென்னை குளோபல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதுகுறித்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் அகில இந்திய தலைவர் கா.குமார் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, புதிய பார்வை ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளரும், மொழிப்போராளியுமான முனைவர் ம.நடராசன் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
ஒரு இலக்கியவாதியாக, தமிழ் மொழி மீது பற்று கொண்டவராக விளங்கிய அவரது இழப்பு, ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். அவரை இழந்து வாடிக் கொண்டிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், புதிய பார்வை பத்திரிகையின் ஊழியர்கள் அனைவருக்கும், ஆழ்ந்த இரங்கலை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும், அவரது ஆன்மா இறைவனடி சேரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் அகில இந்திய தலைவர் மற்றும் காலச்சக்கரம் நாளிதழ் நிறுவனருமான கா.குமார் தெரிவித்துள்ளார்.