வேலூர், நவ.15, 2018:
காலச்சக்கரம் நாளிதழின் நிர்வாக இயக்குநரும், நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவருமான கா.குமார் அவர்கள் அழைப்பு விடுத்ததை ஏற்று நக்கீரன் இதழின் நிறுவனர் கோபால் அவர்கள் காலச்சக்கரம் நாளிதழ் அலுவலகத்துக்கு வருகை புரிந்தார்.
அப்போது திரு. கோபால் அவர்களை கா.குமார் அவர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றார். மரியாதையை ஏற்றுக்கொண்ட நக்கீரன் இதழின் நிறுவனர் கோபால் அவர்கள் இச்சந்திப்பில் பரஸ்பர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
சந்திப்பின் நினைவாக காலச்சக்கரம் நாளிதழின் நிர்வாக இயக்குநரும், நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவருமான கா.குமார் அவர்கள் நக்கீரன் இதழின் நிறுவனர் கோபாலுக்கு நினைவு கேடயத்தை பரிசாக வழங்கினார்.
பின்பு காலச்சக்கரம் அச்சுக்கூடம் மற்றும் அலுவலகத்தை பார்வையிட்டார். அலுவலகத்தை பார்வையிட்ட நக்கீரன் கோபால் காலச்சக்கரம் நாளிதழ் ஊழியர்களுடன் சில மணித்துளிகள் அளவலாவினார். பின்னர் காலச்சக்கரம் நாளிதழ் மேன்மேலும் வளர அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.