தேசிய தாய்மொழி தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கல்வி விழிப்புணர்வு மினி மாரத்தான் வெற்றிகரமாக நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மற்றும் ஆலங்குளம் பசுமை இயக்கம் அறக்கட்டளை சார்பில் முதல் ஆண்டு கல்வி விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி சிறப்பாக நடைபெற்றது.
இதற்கான துவக்க விழாவில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் தலைமை வகித்தார். மாநில இணை செயலாளர் சாமுவேல் பிரபு, மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஐசக் இம்மானுவேல், பசுமை இயக்கம் உறுப்பினர்கள் பாலசங்கர் மற்றும் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டி விவரம்
மினி மாரத்தான் போட்டி மாறாந்தை ஹோலி கிராஸ் மெட்ரிக் பள்ளியில் இருந்து ஆலங்குளம் வரை நடைபெற்றது.
- ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 10 கிலோமீட்டர் மினி மாரத்தான் பொது போட்டியை ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் துவக்கி வைத்தார்.
- பள்ளி மாணவர்களுக்கான 5 கிலோமீட்டர் போட்டியை கரும்புளியூத்து ஆலடி அண்ணா கலை அறிவியல் கல்லூரியில் இருந்து முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் 5000-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர்.
பரிசளிப்பு விழா :
போட்டியில் வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழாவில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் தலைமையில், முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ. சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள் :
நிகழ்ச்சியில் பங்கேற்ற முக்கியமானவர்கள்:
- ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன்
- பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால்
- ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் டாக்டர் பிரவீன் குமார்
- முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் தங்க செல்வம்
- பொறியாளர் துணை அமைப்பாளர் மணிகண்டன்
- நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் உறுப்பினர்கள் இளங்கோ ஆறுமுகராஜ், ராஜதுரை
- முன்னாள் கவுன்சிலர் மோகன்லால்
- திமுக நிர்வாகிகள் சோனா மகேஷ், மேகநாதன், அசோக், சேர்மலிங்கம், பொன்னரசு, ஏ.பி.என். குணா, காசிபாண்டியன், பால் அருணாசலம், சுந்தர், ஸ்டீபன் சத்தியராஜ், அன்பழகன், ஹரி
- காங்கிரஸ் பிரமுகர் ஏசுராஜா
நிகழ்ச்சியின் இறுதியில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் உறுப்பினர் ராஜதுரை நன்றியுரையாற்றினார்.
இந்த முதல் ஆண்டு கல்வி விழிப்புணர்வு மினி மாரத்தான் எதிர்வரும் ஆண்டுகளிலும் சிறப்பாக தொடரும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.