Search This Blog

Translate

பத்திரிகையாளர் அங்கீகார அட்டை வழங்கலில் பாரபட்சம் - NJU தலைவர் Dr கா.குமார் கடும் கண்டனம்

 

இந்த ஆண்டு (2025) அங்கீகார அட்டை பெறுவது பெரிய பத்திரிகைகள் மற்றும் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகும். பெரிய நிறுவனங்கள் மட்டுமே ஊடகத்துறையில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் சிறு குறு பத்திரிகைகளை அழிக்கும் முயற்சியாகவே பார்க்க வேண்டும்.

நடுத்தரம் மற்றும் சிறு குறு பத்திரிகைகளுக்கு பெரும் விளம்பரம் கிடைப்பதில்லை. ஆனாலும், மிகப்பெரிய சிரமத்திலும் குறைந்த பிரதிகள் அச்சடித்தும் தொடர்ந்து பத்திரிகைத்துறை சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு காரணங்களை காட்டி, அங்கீகார அட்டையை மறுப்பது நியாயமற்றது.

பாகுபாடு, பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் சமமாக நடத்துமாறும், அனைத்து சிறு குறு பத்திரிகைகளுக்கும் உடனடியாக அங்கீகார அட்டை வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறும் மாநில அரசுக்கு நேஷனல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பாக வலியுறுத்துகிறோம்.


இதுகுறித்து நேஷனல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் சார்பில் வெளியான அறிக்கையில், 

தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை (Accreditation Card) நடுத்தரம் மற்றும் சிறு குறு செய்தியாளர்களுக்கு இந்த ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். பல ஆண்டுகள் முறையாக பத்திரிகை நடத்தி அங்கீகார அட்டை பெற்று வந்த பல பத்திரிகையாளர்கள் திடீரென அடையாள அட்டையை இழந்து பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

இந்த ஆண்டு (2025) அங்கீகார அட்டை பெறுவது பெரிய பத்திரிகைகள் மற்றும் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகும். பெரிய நிறுவனங்கள் மட்டுமே ஊடகத்துறையில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் சிறு குறு பத்திரிகைகளை அழிக்கும் முயற்சியாகவே பார்க்க வேண்டும்.

நடுத்தரம் மற்றும் சிறு குறு பத்திரிகைகளுக்கு பெரும் விளம்பரம் கிடைப்பதில்லை. ஆனாலும், மிகப்பெரிய சிரமத்திலும் குறைந்த பிரதிகள் அச்சடித்தும் தொடர்ந்து பத்திரிகைத்துறை சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு காரணங்களை காட்டி, அங்கீகார அட்டையை மறுப்பது நியாயமற்றது.

அச்சு ஊடகத்தின் தற்போதைய நிலை குறித்து புரிதல் இல்லாத நபர்களைக் கொண்டு பத்திரிகையாளர் அங்கீகார குழு (Accreditation Committee) இயங்குவது வருத்தமளிக்கிறது. அரசு ஊடக அங்கீகாரம் என்பது ஒருசில நிறுவனங்களுக்கு மட்டும் வழங்கப்படும் சொத்து அல்ல. பாகுபாடு, பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் சமமாக நடத்துமாறும், அனைத்து சிறு குறு பத்திரிகைகளுக்கும் உடனடியாக அங்கீகார அட்டை வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறும் மாநில அரசுக்கு நேஷனல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பாக வலியுறுத்துகிறோம்.

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் முன்னணி நிறுவனங்களின் விற்பனையே கனிசமாக குறைந்துள்ளது என்பதுதான் நிதர்சனம். இந்நிலையில் நடுத்தர-சிறு குறு நிறுவனங்களின் அச்சு பிரிதி சராசரியான முறையில் அச்சிடப்படுகிறது. மேலும் அச்சு பிரிதியால் இயற்கை மரங்கள் அழிக்கப்படுகின்றன. மேலை நாடுகள், டிஜிட்டல் செய்தியை முன்னிலைப்படுத்தி, அச்சு பிரிதிகளை கனிசமாக குறைந்துள்ளனர். இந்தியாவிலும் இணைய செய்திகள் வாசிப்பு அதிகமாகி வருகிறது. இதனால் அச்சு பிரிதி வாசிப்பு குறைந்துள்ளது என்பதை ஒப்புகொள்ளவேண்டும். இந்நிலையில் நடுத்தர-சிறு குறு பத்திரிகைகளை ஒடுக்கும் செயல் ஜனநாயக படுகொடுலையாகும்.

அரசு செய்திகளை அதிகம் வெளியிடுவது சிறு குறு பத்திரிகையாளர்களே :

பல தாலுக்காக்களை ஒன்றினைந்து செயல்படுவதுதான் மாவட்டம். ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள தாலுக்கா செய்திகளை வெளிகொண்டுவருவது சிறு குறு பத்திரிகையாளர்களே.

அரசு விளம்பரங்களுக்காக அரசு செய்திகளை வெளியிடுவது நடுத்தர சிறு குறு பத்திரிகை நிறுவனங்கள் அல்ல...

எந்தவித லாபநோக்கும் இல்லாமல் அரசு செய்திகளையும், அரசு திட்டங்களின் வெற்றிகதைகளையும்(success story) வெளியிடுவது, மக்கள் மத்தியில் அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றையும், பிஆர்ஓ செய்திகளை சுருக்காமால் முழுவதுமாக மக்களிடைய சென்றடைய செய்வது நடுத்தர மற்றும் சிறு குறு செய்திநிறுவனங்கள்தான் என்பதை தமிழ்நாடு அரசு மற்றும் செய்தி–மக்கள் தொடர்புத்துறை உணரவேண்டும்.

இந்நிலையில், அடிப்படை உரிமையான பத்திரிகையாளர் அங்கீகார அட்டை (Accreditation Card) வழங்குவதில் பாரபட்சம் -ஒடுக்குமுறை ஏன்?

PRGI (Press Registrar General of India) :

நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் மத்திய அரசின் கீழ் இயங்கும்  PRGI (Formerly RNI)ல் பதிவு செய்யவேண்டும். பதிவு செய்ய பல்வேறு தகுதி மற்றும் நடவடிக்கை சரிபார்ப்பின் அடிப்படையில் பதிவு   வழங்கப்படுகிறது.  

PRGI (Formerly RNI)-ல் பதிவு பெற்ற முறையான அங்கீகாரத்துடன் இயங்குகிறதா என்பதை முதலில் சரிபார்க்கவேண்டும். மேலும், PRGI  Annual statement சரிபார்ப்பின் அடிப்படையில் நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் ஒழுங்குமுறை (Regularity) சரிபார்த்து தமிழக அரசு அனைத்து அரசு சலுகைகளையும் வழங்கவேண்டும்.  

பதிவு பெற்ற நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் ஒழுங்காக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கவும், உறுதிபடுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை கடந்த ஒராண்டுகளுக்கு மேலாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  கடந்த ஆண்டு PRGI  annual statement தாக்கல் செய்யும் முறை முற்றிலும் மாற்றப்பட்டு தவாறான வகையில் தாக்கல் செய்யாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

பதிவு பெற்ற நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள்  முறையாக தவறாமல் அச்சிடப்படுகிறதா என்றும் ஒழுங்கு நடவடிக்கையாக பல்வேறு வகையில்  PRGI நடவடிக்கை எடுத்துள்ளது. முறையாக நடைபெறாத  நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை முறைபடுத்தி உள்ளது. 

 Regularity இல்லாத நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களால் PRGIல்  annual statement  தாக்கல் செய்ய இயலாது. இவ்வாறு இருக்கையில், PRGI  annual statement சரிபார்ப்பின் அடிப்படையில் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை (Accreditation Card) வழங்கலாம். 

முன்னணி நிறுவனங்களுக்கு இணையாக சொந்த அச்சகத்துடன் இயங்கி வரும் நிறுவனங்களும் புறகணிப்பு:

10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த அச்சகத்துடன் இயங்கி வரும் நடுத்தரம் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கும் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை (Accreditation Card)  மறுக்கப்படுவது என்பது பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புக்கின்றது.

முன்னணி நிறுவன அலுவல் சாரா உறுப்பினர்கள்:

எந்த நோக்கத்திற்காக "பத்திரிகையாளர் நலவாரியம்" மற்றும் குழு அமைக்கப்பட்டதோ அதன் சாரம்சத்தை மறந்து செயலாற்றுகின்றதா? என்பதை பத்திரிகையாளர் நலவாரியம் தலைவராக உள்ள செய்திதுறை அமைச்சர் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.  

முன்னணி நிறுவனத்தினரை மட்டுமே அலுவல் சாரா உறுப்பினர்களாக  நியமனம் செய்ததன் விளைவே இன்று நடுத்தர மற்றும் சிறு குறு செய்தி நிறுவனங்கள் நசுக்கப்படுகின்றன. 

சங்கத்தின் சார்பில் அலுவல் சாரா உறுப்பினர்கள்:

பத்திரிகையாளர் நலவாரியம் என்பது தொழிலாளர்களுக்கானது. இதில் கட்டாயம் தமிழ்நாடு தொழில்துறையில் பதிவுபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலாக இயங்கும்  இரண்டு சங்கத்தில் இருந்து இருவரை அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமனம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்து இருந்தால் உண்மையில் உழைக்கும் செய்தி நிறுவனம், செய்தியளார்களை அடையாளம் காண இயலும்.  இன்று ஏற்பட்டுள்ள அவலநிலைக்கு தள்ளப்பட்டு இருக்காது. 

இதன் மூலம் உண்மையில் உழைக்கும் செய்தியாளர்களின் நிலையை புரிந்து, அவர்களுக்கு உரிய உரிமைகள் வழங்க இயலும்.

மேலும்  பத்திரிகையாளர் அங்கீகார அட்டை விற்பனை செய்வது போன்றவையும் முற்றிலும் ஒழிக்கப்படலாம்.

திராவிட மாடல் ஆட்சி:

செய்தி துறை அமைச்சர்   அறிக்கையில்,  பத்திரிகையாளர்களின் நலனை காக்கும் பொருட்டு இந்த அரசு பொறுப்பேற்று ‘பத்திரிகையாளர் நலவாரியம்’ உருவாக்கப்பட்டது. இந்த நலவாரியத்தில் 3300 பேர் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். நலவாரிய உறுப்பினர்களுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட 21 வகையான நலத்திட்ட உதவிகளை அரசு வழங்கி வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் 2431 செய்தியாளர் அங்கீகார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 446 செய்தியாளர்களுக்கு சுகாதார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பத்திரிகையாளர் நலவாரிய குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் செய்தியாளர்களுக்கு ஓய்வூதியம், மறைந்த செய்தியாளர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. 

“நான் முதலில் பத்திரிகையாளன்; பிறகுதான் அரசியல்வாதி” என்பார் கலைஞர். அவர் காட்டிய வழியில் செயல்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் உறுதியாகவும் அவர்களின் நலன்களை காப்பதில் மிகுந்த அக்கறையுடனும் செயலாற்றி வருகிறது என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் இன்று  நடைபெறும் ஒடுக்கும் செயல் ஏற்புடையாதா? திராவிட மாடல் ஆட்சியில்  நடுத்தரம் மற்றும் சிறு குறு பத்திரிகைகள் ஒடுக்கும் செயல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குழப்பம் :

சுமார் 750 பேருக்கு மட்டுமே தற்போது Accreditation Card வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.  நலவாரியத்தில் 3300 பேருக்கு மேல் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் Accreditation Card மறுக்கப்படுவதால் பத்திரிகையாளர்கள் நலவாரியத்தில் இருந்து நீக்கப்படுவார்களா? என்ற குழப்பமும் எழுந்துள்ளது. 

இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனி கவனம் செலுத்தி உடனடி தீர்வுகாண வேண்டும்.  மீண்டும் பழைய நிலைமையான அங்கீகார அட்டை விற்பனை அட்டையாக மாறிவிட கூடாது.  

பல்வேறு கேள்விகள் :

முறையான  PRGIல் அனுமதி பெற்று,  annual statement  தாக்கல் செய்யும் அனைத்து செய்தி நிறுவன செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு அங்ககீகார அட்டை மற்றும் அரசு சலுகைகள் சென்றடைய நடவடிக்கை எடுக்கவேண்டும். 

 PRGI ல் annual statement  தாக்கல் செய்வதை கண்காணிக்க Press Council of India செயலாற்றுகின்றன. மேலும், இதற்காக Press Council of Indiaக்கு செய்தி நிறுவனம் கட்டணமும் செலுத்துகின்றனர். இவ்வாறு பல்வேறு வகையில் முறையாக செயலாற்றுகின்ற நிறுவனங்களை தமிழ்நாடு அரசு புறக்கின்றதா? அல்லது  Accreditation Committeeக்கு இதனை சரிபார்க்க தெரியாதா? 

தாங்கல் பணியாற்றும் முன்னணி செய்தி நிறுவனம் மட்டுமே செய்தி நிறுவனம் என்ற எண்ணித்தில் Accreditation Committee குழுவினர் செயலாற்றுகின்றனரா?

இதன் பின்னணி என்ன? 

சிறு குறு பத்திரிகை நிறுவனங்களை ஒழிக்கும் முயற்சியா?

ஜாதி ரீதியில் ஒடுக்கும் முயற்சியா?

வழங்கம்போல் அங்கீகார அட்டையை வர்த்தகம் செய்யும் முயற்சியின் அடித்தளமா?

என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் செய்தித்துறை அமைச்சர் உடனடியாக செயல் நடவடிக்கை எடுத்து, விண்ணப்பித்த அனைவருக்கும் அரசு அடையாள அட்டையை வழங்கிட வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(180)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !