Search This Blog

Translate

அமைச்சர் மு.பெ.சாமிநாதனுடன் என்.ஜெ.யூ. நிர்வாகிகள் சந்திப்பு - கோரிக்கை மனு அளித்தனர்

 

படவிளக்கம் : நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின் 2024-ம் ஆண்டு காலண்டரை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வெளியிட்டபோது எடுத்தபடம். அருகில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார், பொதுச்செயலாளர் டாக்டர் இரா.தாட்சாயிணி, இணைச்செயலாளர் ஜி.கே.ராஜா, துணைச்செயலாளர் தனஞ்செயன், அமைப்பு செயலாளர் ஜெய் கணேஷ், துணை ஒருங்கிணைப்பாளர் கருணாகரன், வேலூர் மாவட்ட செயலாளர் ராஜ்பாபு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் உள்ளனர். 

சென்னை, ஜன.22-

தமிழக அரசு செய்தித்துறை நலவாரியத்தில் சங்கத்தின் சார்பில் ஒரு உறுப்பினராக இணைக்கவேண்டும், வீட்டுமனை வசதி, கல்வி உதவி உட்பட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவை நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் மற்றும் மாநில-மண்டல நிர்வாகிகள் ஒன்றினைந்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடம் இன்று (22/1/2024) வழங்கினார்கள்.


நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது, 

1.செய்தி சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு 

செய்திதுறையை சேர்ந்தவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் தொடர்ந்து தாக்கப்படுவதும், செய்தி சுதந்திரத்தை பறிக்கும் விதமாக பொய்வழக்கு புனைவதும் தொடர்ந்து அவ்வப்போது நடைபெற்றுவருகிறது. ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது..! இச்செயல் ஜனநாயக படுகொலையே..! செய்தியாளர்களை தாக்குவது நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதாகும். எனவே செய்தியாளர்களுக்கு செய்தி சுதந்திரம் பாதுகாப்பு சட்டத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றி தர வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக்கொள்கிறது.

2. அரசு வாடகைக் குடியிருப்பு வசதி

பத்திரிகையாளர்களுக்கு அரசு வாடகைக் குடியிருப்பு வசதி, பத்திரிகையாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் சிறப்பு அடிப்படையில் அரசு வாடகைக் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இத்திட்டம்  செயத்தித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு முறையாக சென்றடையவில்லை. இத்திட்டம் செய்தித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு முறையாகச் சென்றடைய வழிமுறைகளை வகுத்து முறைப்படுத்த வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது.

3.வீட்டுமனை வசதி

இத்திட்டத்தின் கீழ், பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் மாவட்ட அளவில் வீட்டு மனை ஒதுக்கீடு செய்வதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனை ஒழுங்குபடுத்த பத்திரிகையாளர் நிர்வாகத்தின் பரிந்துரையின் மூப்பு (Seniority   Based)  அடிப்படையிலே  ஒதுக்கீடு செய்ய ஆவண செய்யவேண்டும். மேலும் ஒதுக்கீடு செய்ய குழு அமைத்து அக்குழுவில் தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் பதிவு செய்துள்ள  நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பாக ஒருவரை குழுவில் இணைக்கவேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது. அவ்வாறு செய்யும்பட்சத்தில் உண்மையான பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைகள் சென்றடையும். இன்றளவில் பல மாவட்டங்களில் சலுகை விலையில் வீட்டுமனைகள் வழங்காமல் நிலைவையில் உள்ளன. விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், சலுகை விலையை தவிர்த்து, இலவச வீட்டுமனை வழங்குமாறு பணிவன்புடன் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது. 

4. கல்வி உதவி

செய்தித் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். நமது பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் பல்வேறு கல்வி சலுகைகள், கட்டணமில்லா கல்வி போன்றவற்றை வழங்கி வருகின்றன. கல்வியில் சிறந்து விளங்கும் நமது மாநிலத்தில் செய்தித்துறையைச் சேர்ந்தவர்களது பிள்ளைகளின் கல்வி தரத்தை மேம்படுத்த, அவர்களது கல்வி கடன் சுமை ஏற்படாமல் தடுக்க வேண்டும். எனவே அரசு ஏற்கனவே வழங்கி வரும RTE 25 சதவீதத்தில் உள் ஒதுக்கீடாக 5 சதவீதம் இடத்தை செய்தித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கவேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக்கொள்கிறது.

5. தாலுக்கா செய்தித்துறையினருக்கு அரசு சலுகைகள்

மாவட்ட செய்தியாளர் களுக்கு மட்டுமே அரசு சலுகைகள் கிடைக்கின்றது. ஆனால் தாலுக்காவில் பணிபுரியும் செய்தியாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.  தாலுக்காக்கள் ஒன்றிணைந்ததுதான் மாவட்டம், எனவே தாலுக்காவில் பணிபுரியும் செய்திதுறையினருக்கு அரசு சலுகைகள் சென்றடைய ஆவணம் செய்யுமாறு  பணிவன்புடன் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக்கொள்கிறது. 

6. பண்டகசாலை

செய்தித்துறையில் பணியாற்றுபவர்கள் சலுகை விலையில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி பயன்பெறுமாறு பண்டகசாலை வசதி ஏற்படுத்தி தந்து உதவுமாறு தங்களை பணிவன்புடன் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக்கொள்கிறது.

7. சிறப்பு அனுமதி

சுற்றுலா தலங்கள், புராணம் மற்றும் ஆன்மிக தலங்கள் போன்ற இடங்களில் செய்தி சேகரிக்க, டாக்குமெண்டரி எடுக்க செய்தித்துறையினருக்கு வசதியாக டூரிஸ்ட் பாஸ், கோயில் பாஸ், தமிழ்நாடு ஹோட்டலில் தங்குவதற்கு 

50 சதவீத கட்டண சலுவை வழங்குமாறு பணிவன்புடன் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக்கொள்கிறது. 

8.தொழிற்சங்க சட்டம் 1926-ன் கீழ் மட்டுமே சங்கம் பதிவு

பத்திரிகையாளர்கள் அல்லாதவர்கள் பதிவுத்துறை (Register Office) Societies Registration Act 1975-ன் கீழ் 7 பேர் கொண்டு சங்கம் என்ற பெயரில் பதிவு செய்து தவறான நடவடிக்கைகளிலும், பத்திரிகையாளர்களுக்கு சேரவேண்டிய பயன்களையும் தட்டிப் பறிக்கின்றனர். இதனால் போலி பத்திரிகையாளர்கள் ஊக்குவிக்கப் படுகின்றனர்.  இதனை தடுக்கும் விதமாக தொழிற்சங்க சட்டம் 1926-ன்  (Under Trade Union Act 1926) கீழ் தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் மட்டுமே பத்திரிகையாளர்கள் சங்கம் பதிவு செய்யவேண்டும் என்ற திருத்தத்தை செய்து ஜனநாயகத்தின் நான்காவது தூணான செய்தித்துறையை பாதுகாக்க வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக்கொள்கிறது

9. நல வாரியம்

தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் பதிவு செய்து முன்னணி செய்தித்தாள்களில் பணிபுரிபவர்களை கொண்டு இயங்கி வரும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன்-ஐ தமிழக அரசு செய்தித்துறை நலவாரியத்தில் ஒரு உறுப்பினராக இணைக்கவேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறது. 

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(180)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !