கடலூர் மாவட்ட நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கூட்டம் கடலூர் ஜி.ஆர். ஹோட்டலில் 03-02-2023 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6:30 மணி அளவில் மாநில துணைத்தலைவர் திரு.கௌ.செ.குமார், மாநில இணைச்செயலாளர் திரு சி.கே. ராஜன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தை மாவட்ட செயலாளர் திரு தி.ராகுலன் முன்னிலையில், மாவட்ட துணைச் செயலாளர் திரு ஐ.நாகமுத்து சிறப்பான ஏற்பாடுகளுடன் நடைபெற்றது.
மாநில செயற்குழு உறுப்பினர் திரு.பி. சிவப்பிரகாசன் (எ) அன்பன் சிவா, மற்றும் மண்டல இணைச்செயலாளர் திரு.நல் முருகானந்தம் ஆகியோர் சங்க வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினர்
இக்கூட்டத்தில் சங்க வளர்ச்சிக்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மேலும் இவ்வாண்டிற்கான கடலூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
1. செய்தி சேகரிப்பில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்ற நமது சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் காப்பீடு
2. பத்திரிகையாளர்களின் இல்ல சுக துக்க நிகழ்வுகளில் நாம் ஓர் குடும்பமாக முன்னின்று பங்கேற்பதோடு அவர்களுக்கு நிதி உதவி அளிப்பது
3. சங்க உறுப்பினகள் பயன்பாட்டிற்காகவும், சங்க வளச்சிக்காகவும் நமது சங்கத்திற்கு மாவட்ட அலுவலகம் அமைப்பது
4. மூத்த பத்திரிகையாளர்களை வரவழைத்து இளம் பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளிப்பது
5. சங்க உறுப்பினர்களுக்கு இவ்வாண்டிற்கான இலவச தனியார் பேருந்து அட்டையை பெற்று தருதல்
6. புதிய உறுப்பினர்களை சேர்த்தல் (அங்கீகாரம் உள்ள பத்திரிகையாளர்கள் மட்டும்)
7. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்கால சூழலில் அதை பயன்படுத்தி ஜூம் மீட்டிங்(Zoom Meeting) வாயிலாக சங்க உறுப்பினர்கள் ஒருங்கிணைத்தல், குறைகள் கேட்பு,
8. உருவாக்குதல் என்பது கடினமான முயற்சி மற்றும் உழைப்பை சார்ந்தது, கலைத்தல் என்பது மிகச் சுலபமானது என்பதை கருத்தில் கொண்டு, நல்ல கோட்பாடுகளுடன் முறையாக தொழிற்சங்க விதிகளில் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு உருவாக்கியுள்ள நம் சங்கத்தை மேலும் வலுப்படுத்துவது என எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
இக்கூட்டம் இறுதியில் மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது. அப்பொழுது, திரு பி.அன்பன் சிவா அவர்கள் திரு கோ.கனகவேல் அவர்களை மாவட்ட தலைவராக முன்மொழிந்தார், திரு நல்.முருகானந்தம் அவர்கள் வழிமொழிந்தார். இதனைதொடர்ந்து அனைவரும் ஏக மனதாக ஒருமித்த கருத்தோடு ஏற்று திரு.கோ.கனகவேல் அவர்களை மாவட்ட தலைவராக தேர்வு செய்தனர்.
இதனையடுத்து, மாநில துணைத்தலைவர் திரு.கௌ.செ.குமார், மாநில இணைச்செயலாளர் திரு சி.கே. ராஜன் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் சங்க விதிமுறைகளை ஏற்று உறுதிமொழியுடன் மாவட்ட தலைவராக திரு கோ. கனகவேல் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனைதொடர்ந்து கடந்த ஆண்டு மாவட்ட செயலாளராக செயல்பட்ட திரு தி.ராகுலன் அவர்களும், மாவட்ட பொருளாளராக செயல்பட்ட என்.முருகவேல் அவர்களும், மாவட்ட துணைச் செயலாளராக செயல்பட்ட ஐ.நாகமுத்து அவர்களும், இவ்வாண்டும் (2023) அதே பொறுப்பில் மீண்டும் தொடர ஒருமித்த கருத்துடன் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்ட நிர்வாகிகள்
மாவட்டத்தலைவர் - திரு கோ கனகவேல்
மாவட்ட செயலாளர் - திரு தி. ராகுலன்
மாவட்ட துணைச்செயலாளர் - திரு ஐ நாகமுத்து
மாவட்ட பொருளாளர் - திரு என். முருகவேல்