அன்புடையீர் வணக்கம்...!
நமது நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின் ஆலோசனைக் கூட்டம் மாநில துணைத் தலைவர் G.J.குமார், மாநில இணைச் செயலாளர் C. K. ராஜன் தலைமையில் கடலூர் ஜிஆர். ஓட்டல் அரங்கத்தில் 24.01.2023ம் தேதி செவ்வாய்கிழமை மாலை 04:00 மணிக்கு துவங்கி 05:00 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு தேசிய மற்றும் தமிழக தலைவர் உயர்திரு டாக்டர்.கா.குமார் அவர்கள் வருகை தந்து சிறப்புரையாற்றுகின்றார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மே-3. உலக பத்திரிகை சுதந்திர தினம் மாநாடு குறித்த ஆலோசனை, சேலம் மாநாட்டில் செய்தியாளர்களை கௌரவித்த தலைவருக்கு பாராட்டு, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பழைய உறுப்பினர்கள் சந்தா புதுப்பித்தல், தங்களின் சிறப்பான ஆலோசனைகளையும் நடைமுறைபடுத்த தேவையான முன்னேற்பாடுகளை செய்தல், தனியார் பஸ் பாஸ், விபத்து காப்பீடு குறித்தும் முடிவு எடுக்க வேண்டும்.
இந்த ஆலோசனைக் கூட்டதுக்கு மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வருகை தந்து தங்களின் சிறப்பான, மேலான ஆலோசனைகளை தெரிவிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வருகை தரும் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வருக வருக என வரவேற்கிறோம்...
தி.ராகுலன்,
கடலூர் மாவட்ட செயலாளர்,
கடலூர் மாவட்ட நிர்வாகிகள்
நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன்(NJU),