தினத்தந்தி செய்தியாளர் ஜோ என்கின்ற சுரேஷ்குமார் மறைவுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவரும், காலச்சக்கரம் நாளிதழ் நிர்வாக இயக்குநருமான கா.குமார் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில் கூறியிருப்பததாவது:
தினத்தந்தி செய்தியாளர் ஜோ என்கின்ற சுரேஷ்குமார் மறைவு என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தருமபுரி மாவட்டத்தில் மூத்த பத்திரிக்கையாளராக திகழ்ந்தவர். சமூக சிந்தனையோடு பல சமூகப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தவர்.
சக பத்திரிக்கையாளர்களோடு தோழமை பாராட்டி சிறப்பாக வழிகாட்டி துணை நின்று பணியாற்றியவர்.
இவருடைய இறப்பு அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் ஒரு மிகப்பெரிய பேரிடியாகும். செய்தியாளருக்கு மட்டுமின்றி சமூகத்திற்கும் பெரிய இழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், சக செய்தியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறு இரங்கல் செய்தியில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவரும், காலச்சக்கரம் நாளிதழ் நிர்வாக இயக்குநருமான டாக்டர் கா.குமார் தெரிவித்துள்ளார்.
🔏பாப்பிரெட்டிப்பட்டி நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் செய்தியாளர்கள்