கடலூர், ஆக.21, 2019:
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கடலூர் மாவட்டத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (21.08.2019) ஜி.ஆர் ஓட்டலில் நடைபெற்றது.
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கடலூர் மாவட்டத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று ஜி.ஆர் ஓட்டலில் நடைபெற்றது.
முன்னதாக கடலூர் மஞ்சகுப்பத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் தேக்கு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் தேசிய துணைத்தலைவர் கலிமுல்லா மற்றும் கடலூர் மாவட்ட என்ஜேயூ நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் மணிமாறன் வரவேற்றார். இதைத் தொடர்ந்து கடலூர் ஜி.ஆர் ஓட்டலில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பங்கேற்கச் சென்ற தேசிய தலைவர் கா.குமாருக்கு பட்டாசுகள் வெடிக்கச் செய்து ஆரவார வரவேற்பு அளிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் உரையாற்றி தேசிய தலைவர் கா.குமார் கூறியதாவது; “நான் வாய் சொல் வீரனடி அல்ல” “செய்வது செவ்வனே செய் என்கின்றவன்” எனவே செயலால் செய்து காட்ட விரும்புகிறேன்.
என் அன்பு சொந்தங்களான பத்திரிகையாளர்கள் பொருளாதார ரீதியிலும், சமூகத்தாலும் மிகவும் பாதிக்கப்ட்டுள்ளனர். அவர்கள், அவர்களது உரிமைகளை பெறவேண்டும் என்றும், அனைவரும் ஒன்றினைந்து செயல்படவேண்டும் என்றும் செய்தியாளர்கள் வாழ்வு வளம் பெற வேண்டும் என்றும் உரையாற்றினார். பத்திரிகையாளர்களின் குறைகளை தெரிவிக்கவும் அதற்கான வழிமுறைகள் முன்மொழியவும் நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.
பின்னர், கடலூர் மண்டல நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் குறைகள் மற்றும் தீர்வுக்கான வழிமுறைகளையும் தெரிவித்தனர். அனைவரது முன்மொழிவுகளையும் ஆராய்ந்து தீர்வு காணப்பட்டது.
ஜனநாயகத்தின் 4-வது தூணாக விளங்குபவர்கள் பத்திரிகையாளர்கள். காலம் நேரம் பாராமல் உழைக்கின்ற பத்திரிகையாளர்கள் பாதுகாப்பிற்காகவும், அவர்களது நிதிநிலைமை மற்றும் குடும்ப மேம்பாட்டிற்காகவும் பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து தொழிற்சங்க சட்டம் 1926-ன் கீழ் (Under Trade Union Act 1926) பதிவு செய்து (Reg.No.1595) கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் என்றும் ஒருமித்த கருத்துக்களும் சங்கமிக்கும் ஓர் இடமே சங்கம் என்றும் பெருமைபட விளக்கம் அளித்தனர்.
இன்று நடைபெற்ற இக்கூட்டத்தில் முக்கியமாக பத்திரிகையாளர்கள் வாழ்வு மேம்படுவும், பொருளாதாரத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் சங்கத்தின் சார்பாக செயல்படுத்தகூடிய நலதிட்டங்கள், இழப்பீட்டு நிதி, குடும்ப நல மேம்பாட்டு நிதி உதவி, கல்விஉதவி தொகை குறித்து ஆலோசித்து சிறப்பான முடிவு எட்டப்பட்டது.
இழப்பீட்டு நிதி உதவி
சங்கத்தின் உறுப்பினர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம், இறப்பு எய்தினால் அவர்களது குடும்பத்தினருக்கு சங்கத்தின் நிவாரண நிதியிலிருந்து இழப்பீட்டு நிதி உதவி விபத்தில் உடல் ஊனம் ஏற்பட்டால் சங்கத்தின் சார்பில் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
குடும்ப நல மேம்பாட்டு நிதி உதவி
பொருளாதார ரீதியாக பின் தங்கியிருக்கும் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு குடும்ப நலமேம்பாட்டு நிதியாக,
1. இலவச மருத்துவ உதவி
2. இலவச கல்வி உதவி
3. கல்வி கடன் உதவி
4.திருமண கடன் உதவி
5. தனிநபர் கடன் (Personal Loan) உதவி போன்றவற்றையும் ஆலோசனை நடத்தினார்கள்.
தீர்மானம்
அதேபோன்று, அரசு சார்பாகவும் பெறவேண்டிய நலதிட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் நடைமுறைகள் சிக்கல் குறித்து அனைவரும் கருத்துகளை பதிவு செய்தனர். அதனடிப்படையில் அனைவருது கருத்துகளையும் ஆலோசிக்கப்பட்டது. இறுதியில் அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்தி சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு
ய்திதுறையை சேர்ந்தவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் தொடர்ந்து தாக்கபடுவதும், செய்தி சுதந்திரத்தை பறிக்கும் விதமாக பொய்வழக்கு புனைவதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. தமிழகம் முழுவதும் செய்தி துறையை சேர்ந்தவர்கள் தொடர்ந்தாக்கப்பட்டு வருகிறார்கள். ஜனநாயகத்தில் குரல்வளை நெரிக்கப்படுகிறது..! இச்செயல் ஜனநாயக படுகொலையே..! செய்தியாளர்களைதாக்குவது நாட்டை அழிவுபாதைக்கு கொண்டுசெல்வதாகும். எனவே செய்தியாளர்களுக்கு செய்தி சுதந்திரம் பாதுக்காப்பு சட்டத்தை நடப்பு நிறைவேற்றி தர வேண்டும்
ஓய்வூதியம்
இன்றைய பொருளாதார சூழலையும், பத்திரிகையாளர் நலனையும் கருத்தில் கொண்டு பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் 10,000/- ரூபாயிலிருந்து 15,000/- ரூபாயாகவும், அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் 5,000/- ரூபாயிலிருந்து 8,000/- ரூபாயாகவும் உயர்த்தி வழங்கி நல்வாழ்விற்கு வழிவகுக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி
பத்திரிகைத் துறையில் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர் மற்றும் பிழை திருத்துபவர் ஆகியோர் பணியில் இருக்கும்போது இயற்கை எய்தினால் அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து குடும்ப உதவி நிதி வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய பொருளாதார சூழலில் வழங்குபட்டுவரும் குடும்ப உதவி நிதி அவர்களது வாழ்வாதாரத்தை காக்க போதுமானதாக இல்லமல் அவர்களது குடுபத்தின் எதிர்காலம் கேள்விகுறியாக உள்ளது. எனவே அதனை மும்மடங்காக உயர்த்தி வழங்கி அவர்களது குடும்பம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு ஒளி ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மருத்துவ உதவி
அனைத்து பத்திரிகையாளர்களும் மருத்துவச் செலவு உதவி எளிதில் பெற மருத்துவ உதவி திட்டத்தில் உள்ள விதிமுறைகளை தளர்த்தி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மருத்துவச் செலவு உதவி தொகை நோய்க்கு ஏற்ப அதிகபட்சமாக ரூ.3,00,000/- வரை மருத்துவ நிதி உதவி உயர்த்தி வழக்க வகை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசு வாடகைக் குடியிருப்பு வசதி
பத்திரிகையாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் சிறப்பு அடிப்படையில் அரசு வாடகைக் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இத்திட்டம் செய்தித்துறையை சேர்ந்தவர்களுக்கு முறையாக சென்றடைவில்லை. இத்திட்டம் செய்திதுறை சேர்ந்தவர்களுக்கு முறையாக சென்றடைய வழிமுறைகளை வகுத்து முறைபடுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை வசதி
இத்திட்டத்தின் கீழ், பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் மாவட்ட அளவில் வீட்டு மனை ஒதுக்கீடு செய்வதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனை ஒழுங்குப்படுத்த பத்திரிகையாளர் நிர்வாகத்தின் பரிந்துரையின் அடிப்படையிலே ஒதுக்கீடு செய்ய ஆவணம் செய்யவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கல்வி உதவி
செய்தித் துறையை சேர்ந்தவர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். நமது பக்கத்து மாநிலங்கிலான ஆந்திரா, தெலங்கான, புதுச்சேரி மாநிலங்களில் பல்வேறு கல்வி சலுகைகள், கட்டமில்லா கல்வி போன்ற வழங்கி வருகின்றன. கல்வியில் சிறந்து விளங்கும் நமது மாநிலத்தில் செய்தித் துறையை சேர்ந்தவர்களது பிள்ளைகளின் கல்வி தரத்தை மேம்படுத்த, அவர்களது கல்வி கடன் சுமை ஏற்படாமல் தடுக்க வேண்டும். எனவே அரசு ஏற்கனவே வழங்கி வரும ஸிஜிணி 25 சதவீதத்தில் உள் ஒதுக்கீடாக 5 சதவீதம் இடத்தை செய்திதுறை சேர்ந்தவர்களுக்கு வழங்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்தியாளர் அங்கீகார அட்டை, இலவசப் பயண பேருந்து அட்டை
அரசு அமைக்கும் “செய்தியாளர் அங்கீகாரக் குழு”வின் பரிந்துரையின் பேரில் ஆண்டுதோறும் நாளிதழ்கள்/ தொலைக்காட்சிகள்/ செய்தி நிறுவனங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு, செய்தியாளர் அங்கீகார அட்டை (Accreditation Card) வழங்கப்பட்டு வருகிறது. செய்தியாளர் அங்கீகார அட்டை வழங்கப் பெற்ற பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு வசதியாக அரசுப் பேருந்துகளில் பயணிக்க ஓராண்டு காலத்திற்குச் செல்லத்தக்க வகையில் இலவசப் பயண பேருந்து அட்டை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இலவசப் பயண பேருந்து அட்டைகள் வழங்குவதற்கான தொகையைப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு இத்துறை ஈடுசெய்கிறது.
அரசு செய்தித்துறை சேர்ந்தவர்களின் நலன் கருதி வழங்கப்படும் செய்தியாளர் அங்கீகார அட்டை, செய்தியாளர் அட்டை, இலவசப் பயண பேருந்து அட்டை வழங்குவதில் விதிமுறைகள் மீறப்பட்டு செய்தித் துறை அல்லாதவர்களுக்கும், தகுதி இல்லாவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. செய்தியாளர் அங்கீகார அட்டை, செய்தியாளர் அட்டை, இலவசப் பயண பேருந்து அட்டை தகுதியானர்களுக்கு கிடைக்கும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் செய்து ஆவணம் செய்ய வேண்டும்என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்தித்துறை வாயிலாக உண்மையான பத்திரிகையாளர்களுக்கு அதாவது அவர் ஏரியா செய்தியாளராக இருந்தாலும் அவருக்கு அரசு வழங்கும் இலவச பேருந்து பயண அட்டைகளை பாகுபாடின்றி வழங்க வேண்டும்.
மேற்கூறிய அனைத்து கோரிக்கைகளையும் தீர்மானமாக அனைத்து உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒன்றினணந்து ஏகமனதாக இன்று (21.08.2019) நிறைவேற்றப்பட்டது.
கடலூரில் இன்று நடந்த நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் ஆலோசனை கூட்டத்தில் மாநில துணைத்ததலவர் ஜெ.பிரேம்குமார், மாநில இணைச் செயலாளர் சி.கே.ராஜன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ரமேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் என்.எழிலரசன், கடலூர் 4வது மண்டல செயலாளர் எல்.வீரபாண்டியன், 4வது மண்டல பொருளாளர் டி.ராஜமச்சேந்திர சோழன், 4வது மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர்.கல்யாணமுருகன், கடலூர் மாவட்ட தலைவர் கே.சங்கர், கடலூர் மாவட்ட செயலாளர் பி.சிவப்பிரகாசம் மற்றும் தேசிய இணைச் செயலாளர்கள் குமார், வாசுதேவன் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் கே.சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.சிவப்பிரகாசம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தேசிய தலைவர் கா.குமார் சிறப்புரையாற்றினார். 4வது மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர்.கல்யாணமுருகன் நன்றி உரையாற்றினார்.
Super,Arumai
ReplyDeleteBy C K RAJAN
Joint Secretary
National Journalists Union...