சென்னை, ஜூலை 18, 2019:
தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்க ஆணையிட்ட முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கும் மற்றும் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் தேசிய தலைவர் கா. குமார் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் வெளியிட்டுள்ள நன்றியறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக செய்தி மற்றும் விளம்பரத் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு 11.30மணிக்கு மேல் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் மற்றும் தேசிய துணைத்தலைவர் கலிமுல்லா உள்ளிட்டோர் தலைமையில், தேசிய இணை செயலாளர் வாசுதேவன், மாநில செயலாளர் பிரேம்குமார், இணை செயலாளர் லட்சாபதி, மண்டல தலைவர் ராமலிங்கம், ஒருங்கிணைப்பாளர் எழிலரசன், துணை ஒருங்கிணைப்பாளர் கருணாகரன், அப்பு, பூவரசன் உள்ளிட்ட செய்தியாளர்கள் சந்தித்து 10 பக்க கோரிக்கை மனுவை அளித்தனர். இதை கணிவோடு வாங்கி படித்து பார்த்தார் அமைச்சர் கடம்பூர் ராஜூ. செய்தித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ என்ஜேயூ சார்பில் வழங்கப்பட்ட கோரிக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாக படித்து பார்த்து மனதில் நிறுத்திக் கொண்டார். அவரவர் பரபரப்புடன் இயங்கும் நிலையில் நள்ளிரவு நெருங்கும் நிலையில் செய்தியாளர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து பேசியது அவரது பெருந்தன்மையையும், புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி இன்றும் தமிழகத்தில் தொடருவதை கண்களால் பார்க்க முடிந்தது. கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்றுவதாக அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் இதில் முத்தாய்ப்பாக இன்று நடந்த செய்தித் துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இதில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜு சட்டப்பேரவையில் தெரிவித்தார். மானிய கோரிக்கை விவாத்தில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியம், சலுகை கட்டணத்தில் வீட்டுமனை, அரசு குடியிருப்பு ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து ள்ளனர். அது தொடர்பாக பத்திரிக்கையாளர்களுக்கு நல வாரியம் அமைப்பது குறித்து சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த குழுவில் நிதித்துறை முதன்மைச் செயலாளர் தலைவராகவும், தமிழ் வளர்ச்சி துறை செயலர் செயலாள ராகவும், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் உறுப்பினராகளாகவும் இருப்பார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இக்குழு பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பது குறித்து அனைத்து சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து அறிக்கை பெறப்படும் என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில் பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
இப்படி ஒரு இனிப்பான செய்தியை அறிவித்து செய்தியாளர்கள் வாழ்வில் ஒளியேற்றினார் அமைச்சர். இந்த செய்தியை கேட்டதும் செய்தியாளர்கள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர். அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு பத்திரிகை யாளர்கள் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தனது நன்றியை அதிமுக அரசுக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கும் மற்றும் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் சமர்ப்பித்து கொள்கிறது.
என்ஜேயூ தமிழக அரசுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்று இதன் வாயிலாக தெரிவித்து கொள்ள கடமைப் பட்டுள்ளோம். இனி செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதுணையுடன் செய்தியாளர்களுக்கு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து அவர்கள் வாழ்வில் வளம்பெறச் செய்வார்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களுடைய அன்பும் அரவணைப்பும் பத்திரிகையாளர்களை திக்குமுக்காடச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குழு நல வாரியத்துக்கு அரசு தலைமை செயலர் நியமிக்கப்பட்டுள்ளார். இனி குழுவில் உறுப்பினர்கள் விரைவில் நியமனம் செய்து நலவாரியம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு என்ஜேயூ தேசிய தலைவர் கா.குமார் வெளியிட்டுள்ள நன்றியறிவிப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.