Search This Blog

Translate

பத்திரிகையினருக்கான குடும்ப உதவி நிதி உயர்த்தி அரசாணை வெளியீடு- முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த நே.ஜ.யூ.தலைவர் டாக்டர் குமார்

 சென்னை, நவ.15-

பத்திரிகையினருக்கான குடும்ப உதவி நிதி உயர்வு அரசாணை வெளியிட்டுள்ளதற்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் தலைவர் டாக்டர் கா. குமார் தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பத்திரிகை துறையில் பணியாற்றும் ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர் மற்றும் பிழை திருத்துவோர் பணிக்காலத்தில் இயற்கை எய்திட நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தற்போது குடும்ப உதவி நிதியாக அவர்கள் பணிபுரிந்த காலத்திற்கு ஏற்ப மூன்று லட்ச ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

இந்த குடும்ப உதவி நிதி ரூபாய் மூன்று லட்சத்திலிருந்து ரூபாய் ஐந்து லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அரசாணை வெயிட்டுள்ளதற்கு மாண்புமிகு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  அவர்களுக்கு அனைத்து செய்திதுறையினர் மற்றும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் மனமார்ந்த நன்றியினை நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் தெரிவித்துள்ளார். 


மேலும் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது, பத்திரிகையாளர்களை காக்கும் பொருட்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து பத்திரிகையாளர்களின் உழைப்பை அங்கீகரித்து பத்திரிகையாளர்களுக்கு பெருமை சேர்ந்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்... 

பத்திரிகையாளர்களின் வாழ்வாதார உதவியாக ரூ.5000 ஊக்கத் தொகை, கொரோனா நோய்த் தொற்றினால் இறப்பு ஏற்படின், இழப்பீட்டுத் தொகையை 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்... 

இதனை தொடர்ந்து ஜனநாயகத்தையும், பத்திரிகையாளர்களை காக்கும் பொருட்டு, திமுக தேர்தல் அறிக்கையில், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில்,  2012 முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, அவதூறு பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காக தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது போடப்பட்ட 90 வழக்குகளை திரும்ப பெறுவதற்கு ஆணையிட்டார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்கள்... 

இதனை தொடர்ந்து தற்போது பத்திரிகையினர் குடும்பங்களை காக்கும் பொருட்டு, தற்போது குடும்ப உதவி நிதி ரூபாய் மூன்று லட்சத்திலிருந்து ரூபாய் ஐந்து லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அரசாணை வெளியிட்டிருப்பது பத்திரிகைத் துறையினருக்கு மேலும் தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்  எங்களையும் தன் குடும்பத்தில் ஒருவராக இணைத்து பெருமை சேர்த்த பத்திரிகை துறைக்கு உயிர் மூச்சாய் இருந்து, உயிர் நீர் ஊற்றியமைக்கு ஊடகவியலாளர்கள் சார்பில் கோடான கோடி நன்றியையும், பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் பெருமை கொள்கிறேன். 

இவ்வாறு   நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் தெரிவித்துள்ளார்.












Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(180)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !